ஐபிஎல் 2021 போட்டியில் 40 வது ஆட்டத்தில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. தொடர்ந்து 5 தோல்விகளை கண்ட சன்ரைசர்ஸ் அணி இந்த போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ஆடியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரரான லீவிஸ் 6 ரன்களுக்கு வெளியேற அதன்பின் ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் சாம்சன் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதன்பிறகு களமிறங்கிய லிவிங்ஸ்டன் 4 ரன்களுக்கு வெளியேறினார். லோம்ரோர் உடன் கைகோர்த்த சாம்சன் அதிரடியாக விளையாடி 57 பந்தில் 82 ரன்கள் அடித்தார். கடைசி ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் வில ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 164 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.
சன்ரைஸ் அணியில் வார்னருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் இங்கிலாந்து அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் ஜேசன் ராய் மற்றும் விருத்திமான் சகா தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். அதிரடியாக விளையாடிய ஜேசன் ராய் 42 பந்துகளில் 60 ரன்கள் விளாசினார். விருத்திமான் சகா 18 ரன்களுக்கும், கார்க் ரன்களை ஏதுமின்றியும் வெளியேறினர். பொறுப்புடன் விளையாடிய வில்லியம்சன் 41 பந்துகளில் 51 ரன்கள் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
18.3 ஓவரில் சன்ரைசர்ஸ் அணி 167 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்றது. தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்விக்குப் பிறகு இந்த போட்டியில் வெற்றி பெற்றதால் சன் ரைசர்ஸ் அணியின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இருப்பினும் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சன் ரைசர்ஸ் அணியின் பிள்ளையார் கனவு பறிபோனது.
#SRHvRR #VIVOIPL https://t.co/TN3tS5tx56 pic.twitter.com/ZiKBBT1MuW
— IndianPremierLeague (@IPL) September 27, 2021
ALSO READ ICC T20 World Cup: உலக கோப்பை பைனல் போட்டியை நேரில் பார்க்க முடியுமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR