’இது ஐசிசி போட்டியா... இல்ல பிசிசிஐ போட்டியா?’ மிக்கி ஆர்தர் அதிருப்தி..! குவியும் கண்டனம்
அகமதாபாத் மைதானத்தில் பாகிஸ்தான் வீரர்களை இந்திய ரசிகர்கள் அவமதித்திருப்பதற்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. முகமது ரிஸ்வான் அவுட்டாகி வெளியேறும்போது ஜெய் ஸ்ரீராம் என முழக்கம் எழுப்பியுள்ளனர்.
இந்தியா - பாகிஸ்தான் உலக கோப்பை லீக் போட்டி மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது. எதிர்பார்த்தைப் போலவே ஒரு லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் போட்டியை நேரில் கண்டுகளிக்க அகமதாபாத் மைதானத்தில் குவிந்தனர். இதனால் எங்கும் நீலப்படையாகவே காட்சியளித்தது. ஒவ்வொரு பந்துக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்களை ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பி உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தனர். இதனால் ஒரு கட்டத்தில் 152 ரன்களுக்கு வெறும் 2 விக்கெட் மட்டுமே இழந்திருந்த பாகிஸ்தான் அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதாவது 300 ரன்களுக்கும் மேலாக அடிக்கும் என எல்லோரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில் பாகிஸ்தான் இவ்வளவு சொற்ப ரன்களுக்குள் எஞ்சிய விக்கெட்டுகளை மளமளவென இழக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.
பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் மிடில் ஆர்டரில் சிறப்பாக ஆடி அணியை வலுவான நிலைக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் தான் பாபர் அசாம் முகமது சிராஜ் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். அது தான் ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது. அடுத்து வந்த வீரர்கள் யாரும் நிலைத்து நின்று விளையாடவில்லை. சுழற்பந்துவீச்சு மற்றும் வேகப்பந்துவீச்சு என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இந்திய அணியின் இந்த கம்பேக் ரசிகர்களுக்கு குதூலகத்தின் உட்சத்துக்கு கொண்டு சென்றது. மைதானத்தில் குழுமியிருந்த ஒட்டுமொத்த ரசிகர்களும் இதனை கொண்டாடிக் கொண்டிருந்த நேரத்தில் ரசிகர்கள் சிலர் வரம்பு மீறிவிட்டனர். அதாவது பாகிஸ்தான் வீரர்களை மத ரீதியாக காயப்படுத்தும் உள்நோக்கத்துடன் முழக்கங்களை எழுப்பத் தொடங்கினர்.
குறிப்பாக முகமது ரிஸ்வான் அவுட்டாகி வெளியேறும்போது, ரசிகர்கள் ஜெய் ஸ்ரீராம்.... ஜெய் ஸ்ரீராம்.. என கத்தி கூச்சலிட்டனர். இதேபோல் பாபர் அசாமுக்கும் நடந்திருக்கிறது. இந்த வீடியோக்கள் அனைத்தும் சோஷியல் மீடியாக்களில் வெளியாகி வைரலான நிலையில் கடும் கண்டனத்தையும் பெற்று வருகிறது. கிரிக்கெட்டை ஒரு விளையாட்டாகவும், சகோதரத்துவத்துடனும் அணுகாமல் மதத்துவேஷம் மற்றும் வெறுப்பு பிரச்சாரமாக மாறியிருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் விமர்சகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதுவும் இந்தியாவில் நடக்கும் இப்படியான அணுகுமுறை, சர்வதேச அளவில் ஒட்டுமொத்த நாட்டின் மீதான நன்மதிப்பை குலைக்கும் என்றும், ரசிகர்கள் இப்படி நடந்து கொள்ளக்கூடாது என்றும் விமர்சகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதே கருத்தை பாகிஸ்தான் அணியின் மிக்கி ஆர்தரும் வலியுறுத்தியுள்ளார். அவர் போட்டிக்கு பிறகு பேசும்போது, இது ஐசிசி நடத்தும் போட்டியா அல்லது பிசிசிஐ நடத்தும் போட்டியா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. போட்டிக்கு இடையில் ஒருமுறைகூட தில் தில் பாகிஸ்தான் என்ற முழக்கங்களை கேட்க முடியவில்லை. அதேநேரத்தில் தோல்விக்கு இது ஒரு காரணம் என்றும் சொல்லவில்லை என தெரிவித்தார். இந்திய அணிக்கு ஆதரவாக மட்டுமே அனைத்து ஏற்பாடுகளும் இருந்ததாகவும், ஓர் இடத்தில் கூட பாகிஸ்தான் அணிக்காக சப்போர்ட்டை பார்க்க முடியவில்லை என ஆதங்கத்தை ஆர்த்தர் வெளிப்படுத்தியிருந்தார்.
உலக கோப்பை போட்டிக்கு முன்பாகவே இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை ஒன்றை பாகிஸ்தான் அணி வைத்திருந்தது. அதில் தங்கள் நாடு விளையாடும் அனைத்து போட்டிகளையும் மேற்கு வங்கம் மற்றும் தென் மாநிலங்களில் மட்டுமே நடத்துமாறு கேட்டுக் கொண்டது. ஆனால் அதனை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொள்ளவல்லை. இதன் விளைவு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கசப்பான அனுபவத்தை அகமதாபாத்தில் எதிர்கொண்டிருக்கிறார்கள்.
மேலும் படிக்க | 'வந்த இடம் என் காடு...' பாகிஸ்தான் தான் பலியாடு - ஆதிக்கத்தை தொடரும் இந்தியா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ