தற்போது நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர் வரும் டிசம்பர் 24-ம் தேதியுடன் முடிகிறது. இரண்டு நாள் கழித்து இந்திய அணி தென் ஆப்பிரிக்கா செல்கிறது. கிட்டத்தட்ட இரண்டு மாதம் தென் ஆப்பிரிக்காவில் சுற்று பயணம் மேற்கொள்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணி கேப்டன், பவுன்ஸ் ஆகும் ஆடுகளங்களில் எங்களை தயார் படுத்திக்கொள்ள போதிய நேரம் இல்லை. வெறும் இரண்டு நாட்கள் தான் உள்ளது. ஆனாலும் நாங்கள் பவுன்ஸ் ஆடுகளங்களில் ஆட தங்களை தயார் படுத்திக்கொள்வோம். வெளிநாடுகளுக்கு செல்வது என்பது எளிது. ஆனால் அங்கு செல்வதற்கு முன்பு, அணி எந்தளவுக்கு தயார் நிலையில் உள்ளது என்பது முக்கியம் எனக் கூறினார்.


மேலும் கொல்கத்தா ஈடன் கார்டனில் ஸ்ரீலங்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி மழை காரணமாக முதல் இரண்டு நாட்கள் மோசமாக பாதிக்கப்பட்ட போதிலும், 4_வது இன்னிங்ஸில் கிட்டத்தட்ட நாங்கள் வெற்றி பெறுவோம் என நினைத்தோம், ஆனால் மீண்டும் மோசமான வானிலை காரணமாக, முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது எனவும் கூறினார்.


தென் ஆப்பிரிக்காஎதிராக 3 டெஸ்ட் போட்டிகள், 6 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 5-ம் தேதி தொடங்குகிறது.