நியூடெல்லி: இந்தியா - வங்கதேசம் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி வங்கதேச தலைநகர் தாக்காவில் நேற்று நடைபெற்றபோது, காயத்துடன் களத்தில் இறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா, அதிரடியாக விளையாடினார். இந்திய அணி வெற்றி பெறவில்லை என்றாலும், காயமடைந்த நிலையில் ஆடிய ரோஹித்தின் ஆட்டம் தான், இந்தியாவை மிகவும் மோசமான தோல்வியில் இருந்து காப்பாற்றியது. பல கிரிக்கெட்டர்கள், காயத்துடனும், வலியுடனும் அணிக்காக விளையாடியுள்ளனர். காயத்துடன் களமிறங்கிய வீரர்களின் பட்டியல் இது. இதில் அனில் கும்ப்ளேவுக்கு முதலிடம் கிடைத்திருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அனில் கும்ப்ளே
2002 ஆம் ஆண்டு தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டிக்காக இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆன்டிகுவாவில் களம் கண்டன. இந்திய பேட்டிங் இன்னிங்ஸின் போது, மெர்வின் தில்லன் வீசிய கடினமான பவுன்சர், அனில் கும்ப்ளேவின் தாடையைப் பதம் பார்த்தது. கும்ப்ளேவின் வாயில் இருந்து ரத்தம் கொட்டியது.


அவர் விளையாட்டில் தொடர முடியாது என்று அனைவரும் சொன்னாலும், ஆச்சரியப்படுத்தும் வகையில், கும்ப்ளே களத்தில் இறங்கினார், ஆடுகளத்தில் இந்தியாவிற்கு அவரைத் தவிர மற்றொரு முன்வரிசை ஸ்பின்னர் இல்லை. வலியைத் தாங்கிக் கொண்ட அனில் கும்ப்ளே 14 ஓவர்கள் வீசினார் மற்றும் பிரையன் லாராவை வெளியேற்றினார்.



 
மால்கம் மார்ஷல்
1984 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஹெடிங்லி டெஸ்டில் பார்பேடியனின் கட்டைவிரல் உடைந்தது. காயங்களை பொருட்படுத்தாமல் சிரித்த முகத்துடன் பேட்டிங் செய்தார் மார்ஷல். ஒரு கையால் பேட்டிங் செய்து, லாரி கோம்ஸ் தனது சதத்தை எட்ட உதவினார். அதன்பிறகு பந்து வீசுவதிலும் சோடை போகாமல், களத்தில் துவம்சம் செய்தார். கட்டைவிரல் உடைந்திருந்தபோதிலும், அவரது ஸ்கோர் 7/53 என்பது அனைவரையும் ஆச்சரியமடையச் செய்தது.



 
கிரேம் ஸ்மித்

வலுவான ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2009 சிட்னி டெஸ்டில், தொடக்க வீரர் மிட்செல் ஜான்சனின் பந்து இடியாக தாக்கியதில் கிரேம் ஸ்ம்த்தின் கையில் காயம் ஏற்பட்டது. காயமடைந்தாலும், ஸ்மித், ஊசி மற்றும் வலி நிவாரணிகளுடன் 10வது இடத்தில் பேட்டிங் செய்தார், மிக உயர்ந்த நம்பிக்கையின் வெளிப்பாடாக கடுமையான வலியுடன் போராடி பேட்டிங் செய்தார். ஆட்டத்தில் பத்து பந்துகள் மட்டுமே இருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.



எம்எஸ் தோனி


இந்தியா மற்றும் ஜிம்பாப்வே இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஆட்டத்தில், இந்தியாவுக்காக பேட்டிங் செய்யும் போது தோனியின் கண்ணில் காயம் ஏற்பட்டது. அந்த காயத்திற்குப் பிறகும், இந்திய கேப்டன் தொடர்ந்து விளையாடினார், மேலும் அவரது சமூக ஊடக புகைப்படம் ஒன்றில் அவரது கண்களின் சேதத்தின் முழு அளவையும் பார்க்க முடிந்தது. 



ஷிகர் தவான்
நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் 2019 உலகக் கோப்பை போட்டியின் போது, ​​பாட் கம்மின்ஸின் பந்து ஷிகர் தவானின் கைகளைத் தாக்கியது. ஆனால், அவர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, அவர் விளையாட்டைத் தொடர்ந்தார்.



மேலும் படிக்க | IND vs BAN : கடைசிவரை போராடிய ரோஹித்... வென்றது வங்கதேசம் - தொடரை இழந்த இந்தியா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ