நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸூக்கு இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொடக்கம் முதலே சரியாக அமையவில்லை. ஆரம்பத்திலேயே தொடர்ந்து 4 போட்டிகளில் தொடர் தோல்வியை தழுவியதால் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்தனர். இருப்பினும் கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஒரு 'கம் பேக்' கொடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆஃப்-க்கு தகுதி பெற வேண்டுமெனில் மீதம் உள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும். அதே நேரம் எஞ்சியுள்ள ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றால் கூட சென்னை அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். ஆனால், இது நடக்க மற்ற அணிகள் மோதும் போட்டிகளின் முடிவுகள் நமக்கு சாதகமாக இருக்க வேண்டும். 


அது எப்படி எனும் கால்குலேட்டர் கணக்குகள் பின்வருமாறு:-


1).பெங்களூரு அணிக்கு மீதம் உள்ள 4 போட்டிகளில் இரண்டில் வெற்றியும், இரண்டு போட்டிகளில் தோல்வியும் அடைய வேண்டும். அதாவது சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்து, சன்ரைசர்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற வேண்டும். இது நடந்தால் 14 போட்டிகளில் 7-ல் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் பந்தயத்தில் பெங்களூரு அணி விளிம்பு நிலையில் இருக்கும். ஆனால் 6 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் தொடரில் இருந்து வெளியேறும் சூழல் ஊருவாகும். 


2).பெங்களூரு போன்றே பஞ்சாப் கிங்ஸ் அணியும் எஞ்சிய நான்கு போட்டிகளில் இரண்டில் வெற்றியும், இரண்டில் தோல்வியும் சந்திக்க வேண்டும். குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பெங்களூரு அணிகளுடனான போட்டியில் பஞ்சாப் தோல்வியடைந்து டெல்லி மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். அப்போது பஞ்சாப் அணியும்  14 போட்டிகளில் 7-ல் வெற்றி எனும் நிலை உருவாகும். அதேநேரம் டெல்லியிடம் பஞ்சாப் தோற்றால் 6 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று பிளே ஆஃப் ரேஸில் இருந்து வெளியேறும்.


மேலும் படிக்க | இதை செய்தால் மும்பை சென்னை அணிகள் பிளேஆப்பிற்கு தகுதி பெறலாம்!


3).சன்ரைசர்ஸ் அணிக்கு அடுத்து உள்ள 5 போட்டிகளில் இரண்டில் வெற்றியும், மூன்று போட்டிகளில் தோல்வியும் அடைய வேண்டும். பஞ்சாப், பெங்களூரு மற்றும் மும்பை அணிகளிடம் தோற்று, கொல்கத்தா மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், சன்ரைசர்ஸ் 14-ல் 7 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்யும். ஒருவேளை சன்ரைசர்ஸ் பெங்களூரு அணியிடம் வென்றாலும் டெல்லியிடம் தோல்வியடைய வேண்டியது அவசியம்.


4).டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மீதம் உள்ள மூன்று அல்லது இரண்டு போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். இல்லையேல் இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் தோற்க வேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் டெல்லி அணி அதிகபட்சமாக 7 வெற்றிகளையும், குறைந்தது 5 அல்லது 6 வெற்றிகளையும் பெற்று பிளே ஆஃப் பந்தயத்தில் இருந்து வெளியேறும்.


5).கொல்கத்தா அணிக்கு அடுத்து வரும் நான்கு போட்டிகளில் இரண்டில் தோல்வியடைந்தால் அதன் பிளே ஆஃப் வாய்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். குறிப்பாக லக்னோ அல்லது சன்ரைசர்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில் அந்த அணி தோல்வியடைந்தால் 6 வெற்றிகளுடன் பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறும். 


இவை எல்லாம் நடந்து சென்னை அணி மீதம் உள்ள 5 போட்டிகளில் வெற்றி பெற்றால் எளிதில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். ஒருவேலை சென்னை அணி ஐந்து போட்டிகளில் ஒரு போட்டியில் தோற்றாலும், ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆஃப் வாய்ப்பு இருக்கும். அதற்கு தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் போட்டிகளில் வெற்றி என்பதை தாண்டி அதிக ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | மும்பை அணி ஃபிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாதா? இதுதான் காரணம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR