ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், இந்த ஆண்டு ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் இருக்கிறது. பலமான அணியாக கருதப்பட்டாலும், அந்த அணியின் மிகப்பெரிய பலவீனம் கோப்பையை வெல்வதற்கு பாதகமாக உள்ளது. ஏலத்தில் நல்ல பிளேயர்களை எடுத்துள்ள அந்த அணியில், சில விஷயங்கள் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
மும்பையின் பலவீனம்
இந்த ஆண்டு மும்பையின் சுழற்பந்து வீச்சு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இருக்காது. அந்த அணியின் தூண்களாக இருந்த ராகுல் சாஹர் மற்றும் க்ருணால் பாண்டியா இல்லாதது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. துருப்புச் சீட்டாக இருந்த டிரெண்ட் போல்ட் மும்பை அணியில் இப்போது இல்லை. பும்ரா மட்டுமே நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தாலும், புதிய பந்தில் 2 ஓவர்கள் மட்டுமே அவரால் சிறப்பாக வீச முடியும். இதனால் விக்கெட் எடுக்கும் பந்துவீச்சாளர்கள் இல்லாதது பெரும் பின்னடைவாக இருக்கும்.
பேட்டிங் பலமா? பலவீனமா?
ரோஹித் ஷர்மா மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக இறங்க உள்ளனர். சூர்யகுமார் யாதவ் இன்னும் முழு உடல் தகுதி பெறாதது மும்பை அணிக்கு பின்னடைவு தான். பின்வரிசையில் வழக்கம்போல் கிரன் பொல்லார்டு உள்ளார். மற்றவர்கள் மும்பை அணிக்கு புதுமுக வீரர்களாக இணைந்துள்ளனர். மேலும், டெவால்ட் ப்ரீவிஸ், திலக் வர்மா, அன்மோல்ப்ரீத் சிங் மற்றும் டிம் டேவிட் இளம் வீரர்களை கொண்ட அணியாகவும் மும்பை இருப்பதால், அவர்களின் ஃபர்மாமென்ஸ் எப்படி இருக்கும்? என்பது இப்போதைக்கு யூகிக்க முடியவில்லை.
பயிற்சியாளர் நம்பிக்கை
திலக் வர்மா மற்றும் டெவால்ட் ப்ரீவிஸ் ஆகியோர் மீது மும்பை பயிற்சியாளர் மஹிலா ஜெயவர்தனே மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளார். சையது முஷ்டாக் அலி தொடரில் சிறப்பாக விளையாடியிருப்பதால், ஐபிஎல் தொடரில் அவர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என ஜெயவர்தனே தெரிவித்துள்ளார். மும்பையின் லெவன்ஸ் பார்த்தாலே மிரளும் அளவிற்கு கடந்த காலங்களில் மும்பை அணி இருந்தது. ஆனால், இப்போது அப்படி இல்லை என்பதால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனினும், மும்பையின் பலத்தை இப்போதே கணிப்பது என்பது சரியாக இருக்காது எனவும் கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR