Chennai: இந்தியன் பிரீமியர் லீக்கின் (Indian Premier League) 13 வது சீசன் தொடங்க இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) கேப்டன் எம்.எஸ்.தோனியின் (MS Dhoni) அதிரடி ஆட்டத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை (World Cup) அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்த பின்னர், இந்திய அணி மற்றும் கிரிக்கெட்டிலிருந்து விலகி இருந்த முன்னாள் இந்திய கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பருமான தோனி, மீண்டும் தனது பேட்டை எடுத்துள்ளார். ஆம் அவர், இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் சீசனில் மீண்டும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் (CSK) அணிக்காக விளையாட தயாராக உள்ளார். அதற்காக ஏற்கனவே சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் (MA Chidambaram Stadium) வலை பயிற்சியில் தோனி ஈடுபட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க.. IPL 2020: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளின் விவரம்...


ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் தோனியின் பயிற்சி காணொளியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளது. அந்த வீடியோவில் 38 வயதான எம்.எஸ். தோனி (MS Dhoni) , நான் இன்னும் திறமையுடன் தான் இருக்கிறேன் என்பதைக் காண்பித்துள்ளார். வலது கை ஆட்டக்காரரான அவர், தொடர்ந்து ஐந்து சிக்ஸர்களை அடித்து மீண்டும் நிருப்பித்துள்ளர். 


 



அந்த வீடியோவில், தொடர்ச்சியாக ஐந்து சிக்ஸர்களை அடித்தது.. ஐ.பி.எல். தொடருக்கு தயார் எனக் கூறியுள்ளார். IPL 2020 சீசன் தொடங்குவதற்கு முன்பே அவரின் இந்த அதிரடி ரசிகர்களுக்கு இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு, அவரின் ஆட்டத்தை காண கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் உட்பட பலர் காத்திருக்கின்றனர்.


மேலும் படிக்க.. மோடிக்குப் பிறகு இந்தியாவில் மிகவும் போற்றப்படும் மனிதர் MS.தோனி!


இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 13 வது சீசனுக்கு முன்னதாக, தோனி (Dhoni) மார்ச் 2 முதல் சென்னையில் தனது பயிற்சியைத் தொடங்கினார். கடந்த சில மாதங்களாக 38 வயதான தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து பல கேள்விகள் எழுப்பட்டது. அதுவும் அவரின் ஓய்வு குறித்து அதிகமாக விவாதிக்கப்பட்டது. ஆனால் தோனி எதுவும் பேசாமல் மவுனமாகவே இருக்கிறார். அவரது அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதில் அனைவரின் கவனம் இருக்கிறது. ஜனவரி மாதம் பி.சி.சி.ஐ.யின் ஒப்பந்த வீரர்களின் பட்டியலில் இருந்து அவர் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க.. டி-20 தொடரில் தோனிக்கு இடம் இல்லை; இளம் வீரர்களுக்கு வாய்ப்பு: பி.சி.சி.ஐ.


தோனி இதுவரை 190 ஐபிஎல் போட்டிகளில் (இரண்டு போட்டி: ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட்ஸ் - Rising Pune Supergiants) விளையாடியுள்ளார் மற்றும் 23 அரைசதம் உட்பட 4,432 ரன்கள் எடுத்துள்ளார்.