தற்போது மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் உள்ள இந்திய அணி, நாடு திரும்பியதும், செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள தென் ஆப்பிரிக்க அணியுடன் மொத உள்ளது. அந்த அணியுடன் மூன்று டி-20 போட்டியிலும், மூன்று டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி விளையாட உள்ளது.
வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் இருஅணிகளுக்கும் இடையே போட்டி ஆரம்பமாக உள்ளது. இந்தநிலையில் தென் ஆப்ரிக்கா அணியுடனான மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. இதில் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 தொடரில் முன்னால் கேப்டன் எம்.எஸ். தோனிக்கு வாய்ப்பு வழங்கப்பட வில்லை. அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் ராகுல் சாஹர், நவ்தீப் சைனி, வாசிங்டன் சுந்தர், கலீல் அஹமது மற்றும் தீபக் சாஹர் போன்ற இளம் வீரர்கள் பலரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
டி-20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு தான் இளம் வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டி-20 தொடருக்கான இந்திய அணி: விராட் கோஹ்லி(கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கே.எல் ராகுல், ஸ்ரேயஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, க்ரூணல் பாண்டியா, வாசிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், கலீல் அஹமது, தீபக் சாஹர், நவ்தீப் சைனி.