Robin Uthappa: தேவதைக்கு தந்தையான உத்தப்பா! கவனத்தை ஈர்க்கும் மகன் டீ சர்ட்
பெண் குழந்தைக்கு தந்தையாகிருப்பதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் உத்தப்பா மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.
Robin Uthappa Daughter: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடி வருபவருமான ராபின் உத்தப்பா, மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் பெண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார். தாய்மை அடைந்திருந்த அவருடைய மனைவி ஷாத்தாலுவுக்கு கடந்த வியாழக்கிழமை பெண் குழந்தை பிறந்தது. இந்த மகிழ்சியான செய்தியை தன்னுடைய அன்பான ரசிகர்களிடம் குடும்பத்தோடு இருக்கும் புகைப்படத்துடன் பகிரந்து கொண்டுள்ளார்.
மேலும் படிக்க | 2022 ஆசியக் கோப்பை நடைபெறுமா? இலங்கை முக்கிய அறிவிப்பு!
அவர் பகிர்ந்திருக்கும் புகைப்படத்தில், புதிதாக பிறந்த மகள், உத்தப்பாவின் மகன் மற்றும் மனைவி ஷீத்தாலு இருக்கின்றனர். மகளுக்கு உத்தப்பா தம்பதி டிரினிட்டி தியா உத்தப்பா எனப் பெயரிட்டுள்ளனர். இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதியிருக்கும் பதிவில், "எங்கள் வாழ்வில் டிரினிட்டி தியா உத்தப்பா என்ற புதிய தேவதை கிடைத்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த உலகிற்கு வந்துள்ள டிரினிட்டி தியா, எங்களை பெற்றோராக ஆசீர்வதித்ததற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
உத்தப்பாவின் மகன், தான் அணிந்திருக்கும் டீ சர்ட்டில் இந்த குட்டி தங்கை அன்பான அண்ணனால் பாதுகாக்கப்பட்டிருக்கிறாள் என்ற வாசகத்தை எழுதியவாறு புகைப்படத்துக்கு போஸ் கொடுத்திருக்கிறார். இந்த மகிழ்ச்சியான தருணத்தை பெற்றிருக்கும் உத்தப்பாவுக்கு கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் தங்களின் வாழ்த்துகளை அனுப்பி வருகின்றனர். உத்தப்பா மற்றும் ஷீத்தாலு தம்பதி முதன்முதலாக 2017 ஆம் ஆண்டு மகனை பெற்றெடுத்தனர். அவருக்கு நீல் நோலன் உத்தப்பா என பெயரிட்டுள்ளனர்.
மேலும் படிக்க | ’ரூல்ஸ் மாத்தனும்’ ஐசிசி-க்கு மெசேஜ் அனுப்பிய அஸ்வின்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ