ஐபிஎல் போட்டியின் பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் இன்று கொல்கத்தாவில் தொடங்குகின்றன. முதல் குவாலிஃபையரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் மோத இருக்கின்றன. முதன்முறையாக ஐபிஎல் போட்டியில் களமிறங்கிய குஜராத் அணி, ஐபிஎல் குவாலிஃபையருக்கு முன்னேறும் என யாரும் கணிக்கவில்லை. ஆனால், அந்த அணியில் இடம்பெற்றிருந்த ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், சுப்மான் கில் உள்ளிட்ட பேட்ஸ்மேன்களும், முகமது சமி, லாக்கி பெர்குசன், ரஷித் கான் உள்ளிட்ட பந்துவீச்சாளர்களும் சீரான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி, அணியை வெற்றி பெற வைத்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கம்பேக் கொடுத்த தினேஷ் கார்த்திக்... ரசிகர்களுக்கு சொல்லிய செய்தி


வழக்கமாக பந்துவீச்சில் மட்டும் ஜொலிக்கும் ரஷித்கான், இந்த தொடரில் பேட்டிங்கிலும் அதிரடி காட்டினார். ஒரு சில போட்டிகளில் பந்துகளை இமாலய சிக்சர்களுக்கு பறக்கவிட்டு தோல்வியின் விளிம்பில் நின்று கொண்டிருந்த அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இதேபோல், ராஜஸ்தான் அணி, கடந்த முறை ஐபிஎல் போட்டிகளில் மிகவும் மோசமாக விளையாடியது. ஆனால், இந்த ஆண்டு சிறப்பாக விளையாடி ஐபிஎல் பாயிண்ட்ஸ் டேபிளில் டாப் 2க்கு முன்னேறியுள்ளனர்.



இன்று கொல்கத்தாவில் நடைபெறும் போட்டியில் இரண்டு அணிகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு முழுமூச்சுடன் விளையாட இருக்கின்றனர். பிளே ஆஃப் சுற்றுகளை பொறுத்தவரை அதிக முறை ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இம்முறை ஐபிஎல் பாயிண்ட்ஸ் டேபிளில் கடைசி இடங்களை பிடித்து வெளியேறியுள்ளன. அவர்கள் வெளியேறினாலும்,சென்னை - மும்பை வீரர்கள் படைத்த சாதனை இன்றும் டாப்பிலேயே இருக்கின்றன. பிளே ஆஃப் சுற்றுகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலை எடுத்து பார்க்கும்போது, சென்னை வீரர்களே கோலோச்சுகின்றன. 



டாப் 8 பேர்களின் பட்டியலில் 7 வீரர்கள் சென்னை வீரர்கள் மட்டுமே உள்ளனர். முதல் இடத்தில் சுரேஷ் ரெய்னா இருக்கிறார். பிளே ஆஃப் சுற்று போட்டிகளில் மட்டும் சுமார் 714 ரன்களை விளாசியிருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் மகேந்திர சிங் தோனி 522 ரன்கள் எடுத்திருகிறார். ஷேன்வாட்சன் 389 ரன்களுடன் 3வது இடத்திலும், 388 ரன்களுடன் மைக் ஹஸ்ஸி 4வது இடத்திலும் இருக்கின்றனர். அடுத்தடுத்த இடங்கள் முறையே முரளி விஜய், டிவைன் ஸ்மித் மற்றும் பாப் டூபிளசிஸ், கைரன் பொல்லார்டு ஆகியோர் உள்ளனர். 


மேலும் படிக்க | மீண்டும் ஐபிஎல்-க்கு திரும்பும் ஏபி டி வில்லியர்ஸ்! ஆர்சிபி அணியில் விளையாடுவாரா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR