ஜட்டு ஜட்டு ஜட்டு! ஜடேஜாவின் அதிரடியில் கடைசி ஓவரில் சீஎஸ்கே வெற்றி!
கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி கடைசி ஓவரில் திரில் வெற்றி.
ஐபிஎல் 2021 38 வது போட்டியான இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. சென்னை அணியில் ப்ராவோவுக்கு பதிலாக சாம்கரன் சேர்க்கப்பட்டார். முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் பேட்டிங் தேர்வு செய்தார்.
பேட்டிங் தேர்வு செய்தது தவறு என்று நினைக்கும் வகையில் கொல்கத்தா அணியின் பேட்டிங் அமைந்தது. சுப்பன் கில் 9 ரன்களுக்கும், வெங்கடேஷ் ஐயர் 18 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். கேப்டன் மோர்கன் 8 ரங்களில் அவுட்டாக கொல்கத்தா அணியின் டாப் ஆர்டர் சரிந்தது. திருப்பாதி மற்றும் நித்திஷ் ராணா கூட்டணி ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டது. கடைசியில் இறங்கிய தினேஷ் கார்த்திக் 11 பந்துகளில் 26 ரன்கள் அடிக்க 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.
சிறிது கடினமான இலக்கை எதிர்கொண்ட சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே அசத்தினர். தொடக்க ஆட்டக்காரர்கள் கெய்குவாட் மற்றும் டுப்லஸ்ஸிஸ் சிறப்பாக ஆடி இருவருமே நாற்பது ரன்களுக்கு மேல் அடித்தனர். அதன்பின் இறங்கிய மொயின் அலி தன் பங்கிற்கு 32 ரன்கள் அடித்தார். ரெய்னா, டோனி, அம்பத்தி ராயுடு அடுத்தடுத்து அவுட்டாக போட்டியின் முடிவு இருபக்கமும் அமைந்தது.
கடைசி இரண்டு ஓவரில் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஜடேஜா 2 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் அடித்து அசத்தினார். இதனால் போட்டியில் டென்ஷன் சற்று குறைந்தது. 6 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் சாம்கரன் மற்றும் ஜடேஜா அவுட் ஆகினர். கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தீபக் சஹர் லெக் சைடில் ஒரு ரன்கள் அடித்து சிஎஸ்கே அணியை வெற்றிபெற வைத்தார். ஜடேஜாவின் அதிரடி ஆட்டத்தினால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றது சிஎஸ்கே அணி.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR