CWG 2022: காமன்வெல்த் போட்டிகளில் கலந்துக் கொள்ளும் இந்திய விளையாட்டு வீரர்கள்
Commonwealth Games 2022: பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா இன்று (2022 ஜூலை 28 வியாழன்) மாலை அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கிறது
Commonwealth Games 2022: பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா இன்று (2022 ஜூலை 28 வியாழன்) மாலை அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கிறது. இதில் உலக சாம்பியன்ஷிப் வெள்ளிப் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும், காமன்வெல்த் விளையாட்டுகளின் இந்த ஆண்டு இந்தியா முதல் ஐந்து இடங்களுக்குள் வரவேண்டும் என்ற ஆவலுடன் களம்காண்கிறது. இந்தியாவின் கனவை நனவாக்க களத்தில் இருக்கும் இந்திய விளையாட்டு வீரர்களின் விவரங்களையும் தெரிந்துக் கொள்வோம்.
இந்தியா விளையாட்டுத் துறையில் வல்லரசாக மாறவேண்டும் என்ற விருப்பங்கள் நிறைவேற இன்னும் நிறைய காலம் ஆகும் என்றாலும், CWG காமன்வெல்த்தில் மிகப்பெரிய தேசத்திற்கு மகிழ்ச்சியான வேட்டையாடும் களமாக உள்ளது.
காமன்வெல்த் போட்டிகளை பர்மிங்காம் வெற்றிகரமான நடத்த பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக காமன்வெல்த் மெகா நிகழ்வை நடத்தும் பிரிட்டனால், காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு விதித்துள்ள விலைக் கட்டுப்பாடுகள் காரணமாக விளையாட்டு அமைப்பை உருவாக்கிய 56 நாடுகளில் புதிய ஏலதாரர்களை ஈர்க்க முடியவில்லை.
மேலும் படிக்க | விளையாட்டு மைதானத்தில் உயிரிழந்த மாணவருக்கு நிவாரண நிதி கிடைக்குமா?
2012 லண்டன் ஒலிம்பிக்கிற்குப் பிறகு இங்கிலாந்தில் மிகப்பெரிய மற்றும் விலையுயர்ந்த விளையாட்டு நிகழ்வாக அமைக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டு, கோவிட்-19 இன் பாதகமான தாக்கத்தை சமாளிக்க வேண்டியிருந்தது, 778 மில்லியன் பவுண்டுகள் என்ற பட்ஜெட்டுடன் இந்த விளையாட்டு போட்டிகள் தொடங்குகின்றன.
2022 காமன்வெல்த் விளையாட்டுகளுக்கான இந்தியாவின் முழுமையான அட்டவணை (விளையாட்டு அடிப்படையில்)
தடகளம்
ஜூலை 30: நிதேந்தர் ராவத் (ஆண்கள் மராத்தான்)
ஆகஸ்ட் 2: அவினாஷ் சேபிள் (ஆண்கள் 3000மீ ஸ்டீபிள்சேஸ்)
முரளி ஸ்ரீசங்கர் (ஆண்களுக்கான நீளம் தாண்டுதல்)
முஹம்மது அனீஸ் யாஹியா (ஆண்களுக்கான நீளம் தாண்டுதல்)
தனலட்சுமி சேகர் (பெண்கள் 100 மீ.)
ஜோதி யர்ராஜி (பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டம்)
மன்பிரீத் கவுர் (பெண்களுக்கான ஷாட் புட்)
நவ்ஜீத் கவுர் தில்லான் (பெண்களுக்கான வட்டு எறிதல்)
ஆகஸ்ட் 3: ஐஸ்வர்யா பி (பெண்களுக்கான டிரிபிள் ஜம்ப்)
ஆகஸ்ட் 5: அப்துல்லா அபூபக்கர் (ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப்)
பிரவீன் சித்திரவேல் (ஆண்கள் டிரிபிள் ஜம்ப்)
எல்தோஸ் பால் (ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப்)
டிபி மனு (ஆண்களுக்கான ஈட்டி எறிதல்)
ரோஹித் யாதவ் (ஆண்களுக்கான ஈட்டி எறிதல்)
சந்தீப் குமார் (ஆண்களுக்கான 10 கிமீ பந்தய நடை)
அமித் காத்ரி (ஆண்களுக்கான 10 கிமீ பந்தய நடை)
ஐஸ்வர்யா பி (பெண்களுக்கான நீளம் தாண்டுதல்)
ஆன்சி சோஜன் (பெண்களுக்கான நீளம் தாண்டுதல்)
அன்னு ராணி (பெண்களுக்கான ஈட்டி எறிதல்)
ஷில்பா ராணி (பெண்களுக்கான ஈட்டி எறிதல்)
மஞ்சு பாலா சிங் (பெண்களுக்கான சுத்தியல் எறிதல்)
சரிதா ரோமித் சிங் (பெண்களுக்கான சுத்தியல் எறிதல்)
ஆகஸ்ட் 6: அமோஜ் ஜேக்கப் (ஆண்கள் 4x400 மீ தொடர் ஓட்டம்)
நோவா நிர்மல் டாம் (ஆண்களுக்கான 4x400 மீ தொடர் ஓட்டம்)
ஆரோக்கிய ராஜீவ் (ஆண்கள் 4x400 மீ தொடர் ஓட்டம்)
முஹம்மது அஜ்மல் (ஆண்கள் 4x400 மீ தொடர் ஓட்டம்)
நாகநாதன் பாண்டி (ஆண்கள் 4x400 மீ தொடர் ஓட்டம்)
ராஜேஷ் ரமேஷ் (ஆண்கள் 4x400 மீ தொடர் ஓட்டம்)
பாவனா ஜாட் (பெண்களுக்கான 10 கிமீ பந்தய நடை)
பிரியங்கா கோஸ்வாமி (பெண்களுக்கான 10 கிமீ பந்தய நடை)
ஹிமா தாஸ் (பெண்களுக்கான 4x100 மீ தொடர் ஓட்டம்)
டூட்டி சந்த் (பெண்களுக்கான 4x100மீ தொடர் ஓட்டம்)
ஸ்ரபானி நந்தா (பெண்களுக்கான 4x100 மீ தொடர் ஓட்டம்)
எம்வி ஜில்னா (பெண்களுக்கான 4x100மீ தொடர் ஓட்டம்)
NS சிமி (பெண்களுக்கான 4x100மீ தொடர் ஓட்டம்)
மேலும் படிக்க | ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மீராபாய் சானு காமன்வெல்த் போட்டிக்கு தகுதி
பூப்பந்து
ஜூலை 29: அஸ்வினி பொன்னப்பா (கலப்பு இரட்டையர்)
பி சுமீத் ரெட்டி (கலப்பு இரட்டையர்)
ஆகஸ்ட் 3: பி.வி.சிந்து (பெண்கள் ஒற்றையர்)
ஆகர்ஷி காஷ்யப் (பெண்கள் ஒற்றையர்)
லக்ஷ்யா சென் (ஆண்கள் ஒற்றையர்)
கிடாம்பி ஸ்ரீகாந்த் (ஆண்கள் ஒற்றையர்)
ஆகஸ்ட் 4: ட்ரீசா ஜாலி (பெண்கள் இரட்டையர்)
காயத்ரி கோபிசந்த் (பெண்கள் இரட்டையர்)
சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி (ஆண்கள் இரட்டையர்)
சிராக் ஷெட்டி (ஆண்கள் இரட்டையர்)
மேலும் படிக்க | காமன்வெல்த் போட்டியில் இருந்து விலகிய தங்க நாயகன் நீரஜ் சோப்ரா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ