Gymnastics: ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் முதல் இந்திய நடுவர் தீபக் கப்ரா
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியின் நடுவராக நியமிக்கப்பட்டிருக்கும் முதல் இந்தியர் தீபக் கப்ரா. 33 வயதிலேயே ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் நடுவராக பணிபுரியும் வாய்ப்பு அனைவருக்கும் அமைவதில்லை...
புதுடெல்லி: தீபக் கப்ரா ஒலிம்பிக்கில் முதல் இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் நடுவராக பணியாற்ற உள்ளார். எதிர்வரும் டோக்கியோ விளையாட்டுப் போட்டிகளில் ஜூலை 23 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜிம்னாஸ்டி போட்டியில் ஆண்கள் ஆர்டிஸ்டிக் பிரிவில் தீபக் கப்ரா நடுவராக செயல்படுவார்.
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியின் நடுவராக நியமிக்கப்பட்டிருக்கும் முதல் இந்தியர் தீபக் கப்ரா. 33 வயதிலேயே ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் நடுவராக பணிபுரியும் வாய்ப்பு அனைவருக்கும் அமைவதில்லை...
டோக்கியோ விளையாட்டுப் போட்டிகளில் ஜூலை 23 ஆம் தேதி நடைபெறும் ஆண்கள் பிரிவு ஜிம்னாஸ்ட் போட்டிகளில் வெற்றியாளரை தீர்மானிக்கும் பொறுப்பை தீபக் கப்ரா அதிகாரப்பூர்வமாக மேற்கொள்வார்.
"கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் எனக்கு அழைப்பு வந்தது, ஆனால் பின்னர் ஒலிம்பிக் ஒத்திவைக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து ஒரு வருடத்திற்கும் மேலாக அது பற்றி எதுவும் தெரியவில்லை. எனவே பதட்டமான காத்திருப்பு தொடர்ந்தது" என்று கப்ரா பி.டி.ஐ. செய்தி ஏஜென்சியிடம் தெரிவித்தார்.
"ஏப்ரல் மாதத்தில் ஒலிம்பிக்ஸ் போட்டியில் நடுவராக பணியாற்றும் வாய்ப்பை கமிட்டி மீண்டும் உறுதிப்படுத்தியது. ஆனால் கோவிட் -19 தொற்றுநோய் அதிகரித்து வந்த நிலையில், ஒலிம்பிக் போட்டி நடக்குமா என்பது குறித்து நிச்சயமற்ற நிலை இருந்தது. ஆனால் கடைசியில், எனது ஒலிம்பிக் கனவை என்னால் வாழ நனவாக்க முடியும் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தீபக் கூறுகிறார்.
Also Read | இங்கிலாந்து அணியை கதறவிட்ட தினம்! 19 ஆண்டுகள் - மறக்க முடியாத போட்டி!
மகாராஷ்டிராவைச் சேர்ந்த 33 வயது இளைஞர் தீபக் சாப்ரா. வழக்கமாக ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் சிறு வயது முதலே பயிற்சி பெற்றிருந்தால் தான் போட்டிகளில் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உண்டு என்பதை வேறு யாரையும் விட தீபக் நன்கு அறிவார். ஏனென்றால், அவர் மிகவும் தாமதமாகவே ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் காலடி எடுத்து வைத்தார்.
"2000 ஆம் ஆண்டில் எனது 12 வயதில் மிகவும் தாமதமாகத் தான் ஜிம்னாஸ்டிக் பயிற்சிகளைத் தொடங்கினேன். சூரத்தில் வசித்து எனக்கு அங்கு பெரிய அளவில் விளையாட்டிற்கான வசதிகள் ஏதும் இல்லை. தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றேன், 2007 குவஹாத்தியில் நடந்த தேசிய விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்றேன்” ” என்று 2005 முதல் 2009 வரை குஜராத் மாநில சாம்பியனாக இருந்த கப்ரா கூறுகிறார்.
"ஒரு தடகள வீரராக எனக்கு எதிர்காலம் இல்லை என்று எனக்குத் தெரியும், எனது அடிப்படைகள் வலுவாக இல்லை, ஆனால் எனக்கு ஆர்வம் இருந்தது, அதனால் நான் நடுவராக பணிபுரிய ஆரம்பித்தேன். எனது பயிற்சியாளர் கவுசிக் பெடிவாலாவும் ஒரு நடுவராக இருந்தார், அவரிடமிருந்து உத்வேகம் பெற்றேன், விரைவில் அதற்கான தேர்வை எழுதி, 2009 இல் முதலிடம் பிடித்தேன். ”
Also Read | டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ. 3 கோடி பரிசு: டெல்லி அரசு அதிரடி
இந்தியாவில் 2010 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் (2010 Commonwealth Games) முதன்முதலாக சர்வதேச அளவிலான போட்டிகளில் நடுவராக பணியாற்றினார். 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் (2014 Asian Games) மற்றும் இளைஞர் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் (Youth Olympics) பணியாற்றிய முதல் இந்திய நடுவர் என்ற பெருமையை கப்ரா பெற்றார்.
உலகக் கோப்பை போன்ற பிற சர்வதேச நிகழ்வுகளைத் தவிர, 2018 ஆம் ஆண்டில் ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் விளையாட்டு, அர்ஜென்டினாவில் இளைஞர் ஒலிம்பிக் ஆகியவற்றிலும் கப்ரா நடுவராக பணியாற்றினார்.
“2010 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் (CWG) நான் தான் வயதில் மிகவும் குறைந்த நடுவராக இருந்தேன். இதுவரை சுமார் 20 முக்கிய நிகழ்வுகளில் பணியாற்றியுள்ளேன். ஒலிம்பிக்ஸில் மட்டுமே பணியாற்றவில்லை. அந்தக் கனவும் இப்போது நிறைவேறுகிறது”என்று கேட்டகிரி 2 பிரிவில் நடுவராக இருக்கும் கப்ரா கூறினார்.
Also Read | Tokyo Olympics எதிர்கொள்ளும் சவால்கள் புதுமையானவை
"ஒலிம்பிக்கில் நடுவராக பணி புரிய குறைந்தபட்சம் 12 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும். 33 வயதிலேயே அதைப் பெற்ற நான் அதிர்ஷ்டசாலி" என்று சொல்கிறார் தீபக். 2018 ஆம் ஆண்டில் ஆசிய ஜிம்னாஸ்டிக்ஸ் யூனியனின் தொழில்நுட்பக் குழுவின் உறுப்பினராக கப்ரா நியமிக்கப்பட்டார்.
டோக்கியோவில் இந்தியாவின் சார்பில் பிரணதி நாயக் கலந்துக் கொள்கிறார். இவர், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்கில் வெண்கலப் பதக்கத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரியோ விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் பிரிவில் இறுதிப் போட்டிகளில் நான்காவது இடத்தைப் பிடித்ததன் மூலம் ஜிம்னாஸ்டிக்ஸில் இந்தியாவின் மிகப்பெரிய நம்பிக்கையாக தீபா கர்மாகர் திகழ்கிறார்.
Also Read | Olympics: நாகநாதன் பாண்டி - கட்டுமானத் தொழிலாளர் முதல் ஒலிம்பிக் வீரர் வரை…
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR