புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணி லார்ட்ஸ் மைதானத்திற்கு வரும்போதெல்லாம், இரண்டு போட்டிகள் நிச்சயம் நினைவில் இருக்கும். ஒரு 1983 உலகக் கோப்பை இறுதிப் போட்டி, மற்றொன்று இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான நாட்வெஸ்ட் டிராபி இறுதிப் போட்டி. இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது.
இதே நாளில், அதாவது ஜூலை 13, இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை தோற்கடித்து நாட்வெஸ்ட் டிராபியை இந்தியா வென்றது. லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் (Lord's Cricket Ground) விளையாடிய இந்த வரலாற்றுப் போட்டி இந்திய கிரிக்கெட்டின் அணியில் பல மாற்றங்களை உருவாக்கியது.
19 ஆண்டுகளுக்கு பிறகு அதே மைதானத்தில்..
நாட்வெஸ்ட் டிராபியின் இறுதிப் போட்டி இங்கிலாந்துக்கு எதிராக ஜூலை 13 அன்று சவுரவ் கங்குலியின் தலைமையில் நடைபெற்றது. இதில், இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 1983 ஆம் ஆண்டில், இதே மைதானத்தில், கபில்தேவ் (Kapil Dev) தலைமையில் மேற்கிந்திய தீவுகளை தோற்கடித்து இந்தியா முதன்முறையாக உலகக் கோப்பையை வென்றது. 19 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா மீண்டும் லார்ட்ஸில் ஒரு சாதனையை செய்தது.
ALSO READ | தோனி ரன் அவுட் ஆன தினம் இன்று. நடந்தது என்ன? தவறு எங்கே நடந்தது?
யுவராஜ் மற்றும் கைஃப் மறக்கமுடியாத இன்னிங்ஸை விளையாடினார்கள்:
இறுதி ஆட்டத்தில், யுவராஜ் சிங் மற்றும் முகமது கைஃப் அற்புதமான அரைசதம் அடித்து இந்தியாவுக்கு வெற்றியைக் கொடுத்தனர். யுவி 69 ரன்களும், கைஃப் ஆட்டமிழக்காமல் 87 ரன்களும் எடுத்தனர். கேப்டன் கங்குலி 43 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு உறுதியான தொடக்கத்தை அளித்தார்.
இந்தியாவுக்கு 326 ரன்கள் இலக்கை நிர்ணயித்த இங்கிலாந்து:
மார்கஸ் ட்ரெஸ்கோதிக் மற்றும் நாசர் உசேன் ஆகியோரின் அற்புதமான சதங்கள் மூலம் இங்கிலாந்து 325 ரன்கள் எடுத்தது. டெஸ்கிரோதிக் 109 ரன்களும், நசீர் உசேன் 115 ரன்களும் எடுத்தனர். இந்தியாவைப் பொறுத்தவரை, ஜாகீர் 3, கும்ப்ளே 1, நெஹ்ரா ஒரு விக்கெட் எடுத்தனர். இறுதிப் போட்டியில் 50 ஓவர்களில் இவ்வளவு பெரிய இலக்கை எந்த அணியும் எட்டியதில்லை. இந்த இலக்கை அடைய இந்திய அணி வீரர்கள் கடுமையாக உழைத்தனர்.
சச்சின்-திராவிட் தோல்வியடைந்தாலும் இந்தியா வென்றது:
இந்த போட்டியின் பெரிய விஷயம் என்னவென்றால், சிச்சன் மற்றும் டிராவிட் இருவரும் தோல்வியடைந்தனர். சச்சின் 14 ரன்களும், டிராவிட் 5 ரன்களும் மட்டுமே எடுத்தனர். இந்தியாவைப் பொறுத்தவரை, சேவாக் மற்றும் கங்குலி ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்த்தனர். ஒரு நல்லத் தொடக்கமாக இந்தியாவுக்கு இருந்தாலும், சேவாக் (45), தினேஷ் மோங்கியா (9), டிராவிட் (5), டெண்டுல்கர் (14) ரன்கள் எடுத்து 23 வது ஓவரில் 146 ரன்களுக்கு பெவிலியனுக்கு திரும்பினர்.
ALSO READ | முதல் பந்தில் விக்கெட் சேட்டை செய்த அதிரடி வீரர் கிறிஸ் கெயில் - வீடியோ வைரல்
ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்த வீரர்கள்
வெற்றியை நோக்கி செல்ல தடுமாறிய இந்தியாவை யுவராஜ் மற்றும் கைஃப் இணைந்து இந்தியாவின் வெற்றிக்கு வழி வகுத்தனர். இந்தியா வெற்றிபெற கடைசி ஓவரில் 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஜாகீர் மற்றும் கைஃப் இந்தியாவுக்கு வெற்றியை தேடி தந்தனர். கடைசி ஓவரின் மூன்றாவது பந்தில் இரண்டு ரன்கள் எடுத்து மீண்டும் லார்ட்ஸில் ஒரு வரலாற்றை பதிவு செய்தனர்.
இந்த நாட்வெஸ்ட் டிராபி (The NatWest Series) இந்தியா, இங்கிலாந்து மற்றும் இலங்கை இடையே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இறுதிப் போட்டிக்கு முன்னர், லீக் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது.
1983 உலகக் கோப்பை இறுதிப் போட்டியைப் போலவே, இந்த போட்டியும் இந்தியர்களின் இதயங்களில் என்றென்றும் அழியாது. இந்த வரலாற்றுப் சிறப்புமிக்க போட்டியில், வெற்றி பெற்ற பின்னர், உற்சாகம் அடைந்த கேப்டன் சவுரவ் கங்குலி (Sourav Ganguly) டி-ஷர்ட்டைக் கழற்றி தனது மகிழ்ச்சியை கொண்டாடினார். இந்த வெற்றி இந்திய மக்கள் மட்டுமில்லை இங்கிலாந்து மக்களும் மறக்க மாட்டார்கள்.
ALSO READ | MS Dhoni: 2020-யிலேயே ஓய்வு பெற்றுவிட்டாலும், இந்த பட்டியலில் இன்னும் தலதான் முதலிடம