ஐபிஎல் 2022 - ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி
இன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீழ்த்தியது.
ஐபிஎல் 2022ன் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
அதன்படி,பட்லரும், ஜெய்ஷ்வாலும் தொடக்க ஆட்டக்காரர்களாக ராஜஸ்தான் அணிக்கு களமிறங்கினர். இருவருமே சொற்ப ரன்களில் வெளியேறியதால் (பட்லர் 7 ரன்கள், ஜெய்ஷ்வால் 19 ரன்கள்) ராஜஸ்தான் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அதனையடுத்து அஷ்வினும், தேவ்தத் படிக்கலும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி டெல்லி பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு 50 ரன்களை சேர்த்தது.
அஷ்வின் அதிரடியாக விளையாடி 38 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து க்ரீஸில் நிற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அஷ்வின் மிட்செல் மார்ஷ் ஓவரில் ஆட்டமிழந்தார்.
அவர் ஆட்டமிழந்ததை அடுத்து சஞ்சு சாம்சன் களமிறங்கி படிக்கலுடன் இணைந்தார். ஆனால் அவர் வந்த வேகத்திலேயே 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த ரியான் பராக்கும், படிக்கலும் வெளியேறினர். படிக்கல் சிறப்பாக விளையாடி 48 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர்களுக்கு அடுத்ததாக வந்த வீரர்கள் பெரிய இன்னிங்ஸ் ஆடாததால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை எடுத்தது.
மேலும் படிக்க | ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் ரவீந்திர ஜடேஜா?
161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு டேவிட் வார்னரும்,பரத்தும் தொடக்கம் தந்தனர். பரத் முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு வார்னருடன் மிட்சல் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை இருவரும் கஷ்டப்பட்டே எதிர்கொண்டனர். இதனால் அணியின் ஸ்கோர் ஆமை வேகத்தில் உயர்ந்தது. போகப்போக இரண்டு பேரும் தங்களது ஆட்டத்தில் வேகத்தை கூட்டினர்.
மேலும் படிக்க | வீரர்களிடம் இரக்கமில்லாமல் இருக்க வேண்டுமென்றேன் - குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா
சிறப்பாக ஆடிய மிட்செல் மார்ஷ் தனது அரைசதத்தை பதிவு செய்தார். இந்த பார்ட்னர்ஷிப்பை உடைத்தே ஆக வேண்டுமென்ற கட்டாயத்தில் ராஜஸ்தான் பந்துவீசியது. ஆனால் அதனை இந்த இணை மிக எளிமையாக எதிர்கொண்டு நூறு ரன்களை கடந்தது. நன்றாக விளையாடிவந்த மார்ஷ் 89 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மார்ஷைத் தொடர்ந்து வந்த ரிஷப் பண்ட் அதிரடியாகவே தனது ஆட்டத்தை ஆரம்பித்தார். சஹால் வீசிய 18ஆவது ஓவரில் 2 சிக்சர்கள் அவர் அடித்ததால் 12 பந்துகளுக்கு 3 ரன்கள் வேண்டும் என்ற நிலையை டெல்லி அணி அடைந்தது. 19ஆவது ஓவரை எதிர்கொண்ட வார்னர் அந்த பந்திலேயே மூன்று ரன்களை எடுத்து தனது அரைசதத்துடன் வெற்றி பெற செய்தார். இதன் மூலம் டெல்லி அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe