வீரர்களிடம் இரக்கமில்லாமல் இருக்க வேண்டுமென்றேன் - குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா

லக்னோ அணி 8 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது நாம் இரக்கமில்லாமல் இருப்போம் என்று வீரர்களிடம் சொன்னேன் என வெற்றிக்கு பிறகு குஜராத் அணி கேப்டன் பாண்டியா கூறினார்.  

Written by - க. விக்ரம் | Last Updated : May 11, 2022, 03:52 PM IST
  • லக்னோவை வீழ்த்தியது குஜராத்
  • முதல் அணியாக குஜராத் ப்ளே ஆஃபில் நுழைந்தது
  • அணியை நினைத்து பாண்டியா பெருமை
வீரர்களிடம் இரக்கமில்லாமல் இருக்க வேண்டுமென்றேன் - குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா title=

ஐபிஎல் 2022ல் நேற்று நடந்த போட்டியில் குஜராத் அணியும், லக்னோ அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 144 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக விளையாடிய லக்னோ அணி 82 ரன்களில் ஆல் அவுட் ஆகி பரிதாபமாக தோற்றது. இதன் மூலம் குஜராத் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது.

இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, “எங்கள் அணி வீரர்களை நினைத்து பெருமை அடைகிறேன். இந்தப் பயணத்தை நாங்கள் ஒன்றாக தொடங்கியபோது எங்கள் மீது நம்பிக்கை வைத்தோம். 14-வது ஆட்டத்துக்கு முன்பாகவே பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது பெருமை அளிக்கிறது. நாங்கள் வெற்றி பெற்ற அனைத்து போட்டிகளிலும் அழுத்தத்தில் இருந்தோம்.

Gujarat

இந்த ஆட்டத்தில் எதிரணி 8 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது நாம் இரக்கமில்லாமல் இருப்போம் என்று வீரர்களிடம் சொன்னேன். அவர்கள் கீழே சரிந்ததால் இன்னும் தாழ்த்துவோம். அதை செய்துவிட்டு போட்டிக்கு பின் ஓய்வெடுப்போம் என்றேன்.

மேலும் படிக்க | ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் ரவீந்திர ஜடேஜா?

இடது கை சுழற்பந்து வீச்சாளரான சாய் கிஷோர் ஒரு டெக்னிக்கல் பந்து வீச்சாளர். அவரது உயரம், வேகம் காரணமாக விக்கெட் எடுப்பதில் கூடுதல் வாய்ப்பு இருக்கிறது. வேகப்பந்து வீச்சு இருந்ததால் அவரை விளையாட வைக்க முடியவில்லை” என்றார்.

மேலும் படிக்க | குஜராத் டைட்டன்ஸ் அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்ற அந்த 3 பேர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News