சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ரவீந்திர ஜடேஜாவுக்கு இந்த ஐபிஎல் தொடர் சரியாக அமையவில்லை. கேப்டனாக நியமிக்கப்பட்டவுடன், மகிழ்ச்சியில் இருந்த அவருக்கு இந்த ஐபிஎல் தோல்விகளை பரிசளித்தது. கடந்த சீசனில் சாம்பியனாக இருந்த சென்னை சூப்பர் கிங்ஸின் ஆட்டம் ஜடேஜா தலைமையில் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் தொடர் தோல்விகளையே அணி சந்தித்து. மேலும், அவருடைய ஆட்டமும் சிறப்பாக இல்லை. பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரு துறைகளிலும் சொதப்பினார்.
மேலும் படிக்க | இனி ஓய்வெடுக்கப்போகும் சூர்யகுமார் யாதவ் - மும்பைக்கு பெரும் பின்னடைவு
பேட்டிங்கில் இதுவரை 116 ரன்களை மட்டுமே எடுத்த அவர், வெறும் 5 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார். இது சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இந்த நிலையில், பெங்களுரு அணிக்கு எதிரான போட்டியில் பீல்டிங் செய்யும்போது காயமடைந்தார். அவருடைய காயம் கொஞ்சம் கவலைக்குரிய வகையில் இருந்ததால் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கவில்லை. தொடரில் கேப்டனாக ஆரம்பித்து, பின்னர் ஒரு வீரராக அதே தொடரில் வெளியே உட்காரவும் வைக்கப்பட்ட சோகம் ஜடேஜாவுக்கு இந்த தொடரில் ஏற்பட்டது.
அவருடைய காயம் குணமடைந்துவிடும் என மருத்துவர்கள் கணித்தனர். ஆனால், காயம் குணமாகவில்லை. நாளை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்க உள்ளது. ஆனால், இதுவரை ஜடேஜாவின் காயம் குறித்த அப்டேட் வெளியாகவில்லை. லேட்டஸ்டாக கிடைத்திருக்கும் தகவலின்படி, அவருடைய காயம் குணமாக சில நாட்கள் ஆகும் என்பதால் மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளார்களாம். இதனால், ஐபில் தொடரில் இருந்து முழுமையாக வெளியேறவும் வாய்ப்புள்ளதாம். இந்த தகவல் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.
மேலும் படிக்க | குஜராத் டைட்டன்ஸ் அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்ற அந்த 3 பேர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR