அஸ்வின் சொல்வது உண்மையா? இவர்களை கைவிடுகிறதா டெல்லி அணி!
ஐபிஎல் 2022 ஏலத்திற்கான உரிமையை தக்கவைத்துக்கொள்ளும் டெல்லி கேபிடல்ஸ் அணியின் திட்டங்களை குறித்து சுழற்பந்து வீச்சாளர் அச்ஜ்`அஸ்வின் சுட்டிக்காட்டுகிறார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) மெகா ஏலம் விரைவில் நடக்க உள்ள நிலையில், தற்போது இருக்கும் எட்டு அணியின் உரிமையாளர்கள், தாங்கள் அணியில் தக்கவைத்துக்கொள்ள மற்றும் வெளியேற்ற விரும்பும் வீரர்களின் பட்டியலை இறுதி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்தமுறை யார் வெளியேறுவார்கள், யார் தக்க வைக்கப்படுவார்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதிப்படுத்தப்படாமல் உள்ள நிலையில், ஒவ்வொரு அணியைப் பற்றி சில வதந்திகள் பரவி வருகின்றன. அதில் ஒன்று டெல்லி கேப்பிட்டல் அணியை குறித்தது தான். அதாவது தானும் ஸ்ரேயாஸ் ஐயரும் டெல்லி அணியில் தக்கவைக்கப்பட வாய்ப்பில்லை என்று சூசகமாக சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) தெரிவித்துள்ளார்.
கடந்த சில சீசன்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் டெல்லி கேபிடல்ஸ் (Delhi Capitals) அணி பிளேஆஃப்களுக்கு தகுதி பெற்றது. அதுவும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் ஐபிஎல் 2020 சீசனின் (IPL 2020 Session) இறுதிப் போட்டி வரை முன்னேறி சென்றது. இருப்பினும், 2021 சீசனில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு பதிலாக டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டார். இந்தமுறையும் டெல்லி அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | ஐபிஎல் 2022ல் பங்கேற்பது பற்றி தோனி கூறிய பதில்!
ஐபிஎல் 2020 ஏலம் புதிய விதி:
பிசிசிஐ சமீபத்தில் மெகா ஏலம் குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதாவது ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 4 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம். அதில் குறைந்தது ஒரு அயல்நாட்டு வீரர்கள் இருக்க வேண்டும் மற்றும் மற்ற மூன்று இடங்களுக்கும் 3 இந்திய வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் என்று நிபந்தனை விதித்தது. இந்த நிபந்தனையால், தொடர்ந்த நல்ல வீரர்களை தக்க வைத்துகொண்ட அணிகளுக்கு சில சிக்கல் ஏற்பட்டுள்ளது. யாரை வெளியேற்றுவது, யாரை தக்க வைப்பது என அணிகள் ஆலோசித்து வருகின்றன.
தக்கவைக்க வாய்ப்பில்லை:
ஐபிஎல் 2022 மெகா ஏலம் நடைபெறும் போது, டெல்லி அணிக்காக தாங்கள் தக்கவைக்கப்பட வாய்ப்பில்லை என எதிர்பார்ப்பதாக தமிழக வீரர் அஸ்வின், தனது யூடியூப் சேனல் ஒரு வீடியோவில் கூறியுள்ளார்.
அதாவது "ஸ்ரேயாஸ் (Shreyas Iyer) அணியில் இருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். நானும் நான் இல்லை. அதனால், வேறு யாராவது அந்த இடத்திற்கு வர வேண்டும். ஒருவேளை என்னை தக்கவைக்க அவர்கள் முடிவு செய்திருந்தால், இந்நேரம் எனக்கு தெரிந்திருக்கும் என வீடியோவில் ஆர். அஸ்வின் தெரிவித்தார்.
ALSO READ | IPL 2022: விராட் கோலிக்குப் பிறகு RCB அணியின் புதிய கேப்டன் இவர்தானா
ஐபிஎல் 2019 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து டெல்லி அணியில் இணைந்தார் அஸ்வின். இதுவரை உரிமையாளருக்கான 2 இன்னிங்ஸ்களில், அனுபவமிக்க சுழற்பந்து வீச்சாளர் 7.55 என்ற எக்னாமிக் விகிதத்தில் 20 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஐபிஎல் டி20 லீக்கில் அஷ்வின் திறமையை பார்த்து தான், 2021 டி20 உலகக் கோப்பைக்கான டி20 இந்திய அணிக்கு அவரை திரும்ப அழைக்கத் தூண்டியது.
வலது கை பேட்ஸ்மேமான ஸ்ரேயாஸ் ஐயரை 2015 ஆம் ஆண்டு சீசனில் 2.6 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டு அணியில் சேர்ந்தார். ஐபிஎல் 2018 சீசனின் நடுப்பகுதியில் கெளதம் கம்பீர் கேப்டன் பதவி விலக முடிவு செய்த பிறகு, ஐயர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
டெல்லி கேபிடல்ஸ் யாரை தக்கவைக்க வாய்ப்பு உள்ள வீரர்கள்:
ரிஷப் பந்த், அவேஷ் கான், ககிசோ ரபாடா, பிரித்வி ஷா, மார்கஸ் ஸ்டோனிஸ், அவேஷ் கான், மற்றும் அக்சர் படேல் ஆகியோர் ஐபிஎல் 2022 மெகா ஏலத்திற்கு முன்னதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் தக்கவைக்கப்படும் முதல் போட்டியாளர்கள்.
அதிகபட்சமாக 4 வீரர்களை உரிமையாளரால் தக்க வைக்க முடியும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ALSO READ | ஐபிஎல் 2022: ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்கவைத்து கொள்ளலாம்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR