ஐபிஎல் 2022: ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்கவைத்து கொள்ளலாம்?

ஐபிஎல் 2022ல் வீரர்களை தக்க வைத்து கொள்வதற்கான விதிமுறைகளை அறிவித்துள்ளது பிசிசிஐ  

Written by - ZEE Bureau | Last Updated : Oct 31, 2021, 03:19 PM IST
ஐபிஎல் 2022: ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்கவைத்து கொள்ளலாம்?

ஐபிஎல் 2022ல் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 4 வீரர்களைத் தக்க வைத்துக் கொள்ளலாம் எனவும், புதிய அணிகள் மெகா ஏலத்திற்கு முன் 3 வீரர்களைத் தேர்வு செய்யலாம் எனவும் பிசிசிஐ அறிவித்துள்ளது.  அடுத்த ஆண்டு நடக்க உள்ள ஐபிஎல் போட்டியில் மெகா ஆக்சன் நடைபெற உள்ளது.  அதன்படி, தற்போது உள்ள வீரர்களை அனைத்து அணிகளும் ரிலீஸ் செய்ய வேண்டும்.

ALSO READ இந்தியா - நியூசிலாந்து போட்டியில் களம் இறங்குவாரா ஹர்திக் பாண்டியா?

பிசிசிஐயின் அதிகாரிகளிடம் இருந்து வந்த தகவலில்படி, பிசிசிஐ அணி உரிமையாளர்களுக்கு எழுதிய கடிதத்தில், தற்போதுள்ள 8 அணிகள் நவம்பர் 1 முதல் நவம்பர் 25 வரை அதிகபட்சமாக 4 வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்கப்படும் என்று கூறியுள்ளது.  இரண்டு புதிய அணிகளும் மெகா ஏலத்திற்கு முன் அதிகபட்சமாக 3 வீரர்களை தேர்வு செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளது.  புதிய அணிகளுக்கான 3 வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 25 என கூறியுள்ளது. 

ipl2022 

தற்போதுள்ள 8 அணிகள் 3 இந்திய வீரர்களுக்கு மேல் தக்கவைக்க முடியாது, அதே சமயம் 2 வெளிநாட்டு வீரர்களுக்கு மேல் தக்கவைக்க முடியாது.  அதன்படி, 3 இந்திய வீரர்கள் 1 வெளிநாட்டு வீரர் அல்லது 2 இந்திய வீரர், 2 வெளிநாட்டு வீரரை தக்க வைத்து கொள்ளலாம். இரண்டு புதிய அணிகளும் அதிகபட்சமாக 2 இந்திய வீரர்களை தேர்வு செய்யலாம்.  8 அணிகளுக்கும் அதிகபட்ச ஏல தொகையாக தலா ரூ.90 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  ஒரு அணி 4 வீரர்களைத் தக்க வைத்துக் கொண்டால், முதல் வீரருக்கு ரூ. 15 கோடியுடன் மொத்தம் ரூ.42 கோடி அவர்களின் ஏல தொகையில் இருந்து கழிக்கப்படும்.  2 வீரர்களுக்கு ரூ.14 கோடி, ரூ.10 கோடி, ஒரு வீரரை மட்டும் தக்கவைத்துக்கொள்ளும் அணிகள் அவருக்கு ரூ.14 கோடி செலுத்த வேண்டும்.  Sanjiv Goenka-helmed RPSG Group ரூபாய். 7090 கோடிக்கு லக்னோ அணியையும்,  ஃபார்முலா ஒன் முன்னாள் உரிமையாளர்கள் ரூபாய். 5625 கோடிக்கு அகமதாபாத் அணியையும் வாங்கியுள்ளன.

ALSO READ தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் சிஸ்கே வீரரின் சகோதரி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News