IPL 2020 பட்டத்தை Delhi Capitals வெல்லும் என அடித்துச் சொல்லும் வரலாறு? சரித்திரம் திரும்புமா?
ஐபிஎல் 2020 இறுதிப் போட்டியில் நவம்பர் 10 ஆம் தேதியன்று (செவ்வாய்க்கிழமை) மும்பை இந்தியன்ஸ் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்ளும்.டெல்லி கேபிடல்ஸே வெல்லும் என்னும் சரித்திரம் தொடருமா?
Delhi Capitals அணி தனது முதல் ஐபிஎல் இறுதி போட்டிக்கு தயாராகி வருவதால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதிகம் பிடித்த அணியாக இருக்கும். ஐ.பி.எல் போட்டித்தொடர்களின் விசித்திரமான வரலாறு இதற்கு காரணமாக இருக்கும் என்று பரவலாக பேசப்படுகிறது. சென்னை அணியின் விருப்பமும், டெல்லி அணியின் துடிப்பான செயல்பாடும், முதன்முறையாக ஐ.பி.எல் போட்டித்தொடரின் இறுதிப் பந்தயத்தில் விளையாடுவதும் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை பிரகாசமாக்கக்கூடும்.
ஐபிஎல் வரலாற்றை சற்றே புரட்டிப் பார்த்தால் சில பல விஷயங்களை நாம் அனுமானிக்கலாம். கடந்த வெற்றியாளர்களைப் பார்த்தால், டெல்லி கேபிடல்ஸ் அணி ஐபிஎல் பட்டத்தை வெல்லும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
ஐபிஎல் 2008, ஐபிஎல் 2012, ஐபிஎல் 2016 - இவை அனைத்திற்கும் பொதுவான ஒன்று உள்ளது. இந்த பதிப்புகள் அனைத்தும் ஒரு லீப் ஆண்டில் நடந்தன. இந்த அனைத்துப் போட்டித்தொடரிலும் மகுடம் சூடியது, அதற்க்கு முன்பு ஐ.பி.எல் பட்டத்தை வெல்லாத ஒரு அணி. இந்த சூத்திரம் டெல்லி கேபிடல்ஸுக்கு பொருந்துகிறது. இதுவரை, டெல்லி கேபிடல்ஸ் ஒருமுறை கூட ஐ.பி.எல் பட்டத்தை வெல்லவில்லை.
மூன்று லீப் ஆண்டுகளில் மூன்று புதிய சாம்பியன்கள். எனவே இந்த லீப் ஆண்டின் போட்டித்தொடரின் வெற்றி அணியாக தலைநகரின் பெயரையே வைத்திருக்கும் டெல்லி கேபிடல்ஸாக இருக்கலாம்.
மீண்டும் பழைய வரலாறு திரும்பினால், ஐபிஎல் 2020 பட்டத்தை வெல்வது டெல்லி கேபிடல்ஸாக இருக்கும்.
2008 ஆம் ஆண்டில் ஐபிஎல்லின் முதல் பதிப்பில் (லீப் ஆண்டு), ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டியின் முதல் சாம்பியன்களாக வெற்றிவாகை சூடி, ஐ.பி.எல்லில் பிள்ளையார் சுழி போட்டது. இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொண்டு வாகை சூடியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி..
கெளதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2012ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்றது. அந்த லீப் ஆண்டிலும் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டு சிறப்பாக விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இதுவே கொல்லத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முதல் ஐ.பி.எல் வெற்றி ஆகும்.
2016 ஆம் ஆண்டில், டேவிட் வார்னரின் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, தனது முதல் ஐபிஎல் கிரீடத்தை வென்றது, இறுதிப்போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, RCB-ஐ எதிர்கொண்டது.
ஆகவே, கடந்த கால சரித்திரத்தின் அடிப்படையில் பார்த்தால், இந்த ஆண்டு லீப் ஆண்டாக இருப்பதால், மும்பை இண்டியன்ஸ் அணியை விட டெல்லி அணிக்கு வெல்லும் வாய்ப்பு அதிகம். மும்பை இண்டியன்ஸ் ஏற்கனவே இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டித்தொடரில் மூன்று முறை டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியுள்ளனர். இந்த கோணத்தில் பார்த்தால் மும்பை அணி வெல்வதற்கான வாய்ப்பு அதிகம்.
இன்றைய ஐ.பி.எல் இறுதிப் போட்டியில் நான்கு முறை ஐ.பி.எல் சாம்பியனாய் மகுடம் சூடிய மும்பை இண்டியன்ஸ் வெல்லும் என்று பலரும் கணிக்கின்றனர். அதுமட்டுமல்ல, மும்பை இண்டியன்ஸ் அணியை பலருக்கும் பிடிக்கும். இந்த சூழ்நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணி, வரலாற்றில் இந்த விசித்திரமான அத்தியாயத்திலிருந்து ஓரளவு உத்வேகம் பெறலாம். ஆனால் விளையாட்டு என்பது எப்போதும் எப்படி வேண்டுமானாலும் மாறக்கூடியது. ஆட்டத்தின் போக்கு மாறுவதற்க்கு அதிக நேரம் ஆவதில்லை.
எந்த அணி வெற்றி பெறப்போகிறது? கணிதங்கள் கணிப்புகள் காய்க்குமா? இல்லை கசக்குமா?
அனைத்து ஆர்வ முடிச்சுகளும், இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் ஐ.பி.எல் 2020 இறுதிப்போட்டியில் அம்பலமாகிவிடும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR