கிரிக்கெட் நியூஸ்: வரவிருக்கும் டி 20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய டி-20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி அறிவித்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில், டி-20 அணியின் அடுத்த கேப்டன் பொறுப்பு ரோஹித் சர்மாவிடம் ஒப்படைக்கப்படும் என எல்லா இடங்களிலும் ஊகங்கள் எழுந்துள்ளன. ஆனால் விராட் கோலியின் ராஜினாமா அறிவிப்புக்குப் பிறகு, கே.எல்.ராகுல் (KL Rahul) பெயர் சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங்கில் வலம் வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அடுத்த கேப்டனாக கேஎல் ராகுலை நியமிக்க சமூக ஊடகங்களில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதற்குக் காரணம், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கரும் (Sunil Gavaskar) இந்த கருத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது.


 



டி-20 உலகக் கோப்பை (T20 World Cup 2021) இந்திய அணியில் கேஎல் ராகுலுக்கு தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அவர் சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் ரோகித் சர்மாவுடன் இன்னிங்ஸைத் தொடங்கினார்.


இது தவிர, இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) ப்ரீத்தி ஜிந்தாவின் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் ராகுல் உள்ளார். அவர் தனது தலைமையின் கீழ் பஞ்சாப் அணியை சிறப்பாக வழிநடத்தினார்.


ALSO READ | கேப்டன் பதவில் இருந்து விலகும் விராட் கோலிக்கு வலுவாக திரும்புவார்!


கே.எல்.ராகுல் தயாராக வேண்டும்:
சுனில் கவாஸ்கர் கூறுகையில், எதிர்காலத்தில் கேப்டனாக இந்திய அணியை வழிநடத்த கே.எல்.ராகுல் தயாராக இருக்க வேண்டும். இருப்பினும், தற்போது விராட் கோலிக்கு பிறகு, ரோஹித் சர்மா (Rohit Sharma) கேப்டனாக பொறுப்பேற்க தயாராக இருக்கிறார். பிசிசிஐ எதிர்காலத்தை நோக்கி சிந்திப்பது நல்ல விஷயம் என்று நான் நினைக்கிறேன். இதனால் முன்கூட்டியே சிந்திக்க வேண்டியது அவசியம் என விராட் கோலி ராஜினாமா அறிவிப்புக்கு பிறகு கூறியுள்ளார்.


துணை கேப்டனாக நியமிக்க வேண்டும்:
அவர் மேலும் கூறுகையில், இந்தியா புதிய கேப்டனைத் தேடுகிறதென்றால், அது கேஎல் ராகுலை நோக்கிப் பார்க்க வேண்டும். அவர் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இங்கிலாந்திலும் சிறப்பாக பேட்டிங் செய்தார். அவர் ஐபிஎல் மற்றும் 50 ஓவர் கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்படுகிறார். அவரை துணை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்றார்.


ALSO READ | அதிரடி மாற்றத்துக்கு தயாராகும் இந்திய அணி


கேப்டன் பதவிக்கு ராகுலின் பெயர் பரிசிலிக்க வேண்டும்:
ஐபிஎல் தொடரில் ராகுலின் திறமையைப் பற்றிய பேசிய கவாஸ்கர், 'ஐபிஎல்லிலும் அவர் நல்ல தலைமைத்துவத் திறனை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு அணியை கேப்டனாக வழிநடத்திய போதும், அதன் அழுத்தம் தனது பேட்டிங்கை பாதிக்க அவர் அனுமதிக்கவில்லை. அவருடைய பெயர் விவாதிக்கப்பட வேண்டும் என்றார்.


பதவியில் இருந்து விலகும் விராட் கோலி:
அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறும் டி-20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய டி-20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலக இந்திய கேப்டன் விராட் கோலி (Virat Kohli) முடிவு செய்துள்ளார். அவர் இதுவரை 45 டி-20 போட்டிகளில் இந்தியாவுக்கு கேப்டனாக இருந்துள்ளார். அதில் இந்தியா 27 முறை வென்றுள்ளது.


ALSO READ | கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுகிறார் விராட் கோலி!


 



 



உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR