இந்திய கிரிக்கெட் அணியின் 28 ஆண்டுகால உலகக்கோப்பை பசியை தீர்த்துவைத்தவர் என்றும், இந்திய கேப்டன்களில் முக்கியமானவராகவும் கருதப்படுபவர் மகேந்திர சிங் தோனி. இவர் தலைமையில் இந்திய அணி டி20 உலகக்கோப்பை(2007), ஒருநாள் உலகக்கோப்பை(2011), சாம்பியன்ஸ் டிராபி(2013) ஆகிய ஐசிசியின் முதன்மையான கோப்பைகளை கைப்பற்றின. அதுமட்டுமின்றி, இவரது காலகட்டத்தில் இந்திய அணியில் இளைஞர்களின் வருகை அதிகமாகி, பெரிய மாற்றத்திற்கும் உள்ளானது எனக் கூறலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஓய்வுபெற்று 2 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், மகேந்திர சிங் தோனி தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் நேரலையில் வர இருப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,"நாளை (செப். 25) மதியம் 2 மணியளவில் சில உற்சாமளிக்கும் செய்திகளை நான் உங்களுடனும் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன். அனைவரும் அதில் பங்கேற்பீர்கள் என நினைக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.


மேலும் படிக்க | தோனி மட்டும் தான் என்னிடம் பேசினார்: உண்மையை உடைத்த விராட் கோஹ்லி!