IPL 2023: பவுலராக மாறிய தோனி; சேப்பாக்கத்தில் பவுலிங் செய்யும் வீடியோ இதோ
சென்னை சேப்பாக்கத்தில் பவுலிங் பயிற்சியில் தோனி ஈடுபடும் வீடியோ வெளியாகியுள்ளது. பேட்டிங் பயிற்சி மட்டுமே செய்து வந்த அவர், இந்தமுறை பந்துவீச்சு பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.
ஐபிஎல் 2023 பிரம்மாண்டமாக அகமதாபாத்தில் மார்ச் 31 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் தோனி தலைமையிலான முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நடப்பு சாம்பியனான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் களம் காண்கின்றன. இந்தப் போட்டிக்கு ஆயத்தமாகும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கோட்டையான சேப்பாக்கத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. மார்ச் 3 ஆம் தேதி முதல் சிஎஸ்கே வீரர்கள் சேப்பாக்கத்தில் முகாமிட்டு தீவிர பயிற்சியை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க | Viral Video: பழைய பன்னீர்செல்வமாக வந்த தோனி... சிக்ஸரில் சொக்கி நிற்கும் ரசிகர்கள்!
கேப்டன் தோனி தலைமையில் சிஎஸ்கே வீரர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்றுள்ளனர். வழக்கம்போல் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட தோனி, இந்த முறை பவுலிங் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். அவர் இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டனாக இருந்தபோது சர்வதேச போட்டிகளில் பவுலிங் செய்திருக்கிறார். ஆனால், ஐபிஎல் போட்டியில் ஒருமுறை கூட அவர் பந்து வீசியதில்லை. இந்நிலையில், இந்த முறை பவுலிங் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.
ஒருவேளை இந்த ஐபிஎல் போட்டியில் அவர் பந்துவீச வாய்ப்புள்ளதோ என ரசிகர்கள் சிந்திக்க தொடங்கிவிட்டனர். தோனியை பொறுத்தவரை இந்த ஐபிஎல் போட்டியுடன் கிரிகெட்டுக்கு விடை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 40 வயதைக் கடந்துவிட்ட அவர், கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின்போதே ஓய்வு பெறும் எண்ணத்தில் இருந்தார். ஆனால், சேப்பாக்கத்தில் ஒருமுறை விளையாடிவிட்டு தன்னுடைய ஓய்வு அறிவிப்பை வெளியிடலாம் என முடிவெடுத்துள்ளார். இதனை அவரே கடந்த ஐபிஎல் போட்டியில் தெரிவித்திருந்தார். அதனால், இந்த முறை சேப்பாக்கத்தில் விளையாடும் கடைசி போட்டியில் தோனி அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறும் அறிவிப்பை வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | IPL2023: தோனி ஹூக்கா மிகவும் விரும்பி பிடிப்பார் - ஜார்ஜ் பெய்லி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ