’விநோத அவுட்’ அப்பீல் செய்யாத கீப்பர்... முறையிட்ட பவுலர்: யோசித்து அவுட் கொடுத்த அம்பயர்: வைரல் வீடியோ

Cricket Funny Video: உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் பவுலர் அவுட் அப்பீல் செய்தவுடன் யோசிக்க ஆரம்பித்த அம்பயர், பவுலர் அடுத்த பந்து வீச வரும்போது அவுட் கொடுத்த விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விநோத அவுட் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 6, 2023, 05:14 PM IST
’விநோத அவுட்’ அப்பீல் செய்யாத கீப்பர்... முறையிட்ட பவுலர்: யோசித்து அவுட் கொடுத்த அம்பயர்: வைரல் வீடியோ title=

கிரிக்கெட் போட்டியில் அவ்வப்போது அம்பயர்கள் செய்யும் தடுகிதத்தங்கள் இணையத்தில் வைரலாகும். குறிப்பாக அவர்கள் அவுட் கொடுக்கும்போது தான் பெரும்பாலும் சர்ச்சையில் சிக்குவார்கள். அண்மையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டியில் சர்ச்சைக்குரிய வகையில் அவுட் கொடுத்த நிதின் மேனன் ரசிகர்களிடம் கடும் விமர்சனத்துக்குள்ளானார். இதேபோல் வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த ஸ்டீவ் பக்னர் வேண்டுமென்றே அவுட் கொடுக்க நீண்ட நேரம் எடுத்துக் கொள்வது கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது.

மேலும் படிக்க | இந்தியாவிற்கு விளையாட வரும் பாகிஸ்தான் அணி? சூசகமாக சொன்ன பாபர் அசாம்!

குறிப்பாக ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இந்திய அணிக்கு எதிராக அப்பீல் செய்யும்போதெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு விரலை உயர்த்தி அவுட் கொடுத்ததை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். அப்படியான சம்பவம் ஒன்று தான் இப்போது உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் நடந்திருக்கிறது. இணையத்தில் வைரலாகியிருக்கும் அந்த வீடியோவில் அம்பயரின் செயல் செம காமெடியாகவும் இருக்கிறது. பவுலர் பந்துவீசியவுடன், கேட்ச் அப்பீல் செய்கிறார். விக்கெட் கீப்பர் கேட்ச் பிடித்துவிட்டு பெரிதாக ரியாக்ட் எதுவும் செய்யவில்லை. ஆனால் பவுலர் மீண்டும் முறையிட, அமைதியாகவே நிற்கிறார் அம்பயர்.

அவுட் கொடுக்கவில்லை என்ற விரக்தியில் மீண்டும் பந்துவீச செல்கிறார் பவுலர். ஆனால் அங்கு தான் டிவிஸ்ட் நடந்தது. பவுலர் அவுட் கேட்டு அப்பீல் செய்துவிட்டு மீண்டும் பந்துவீச ஓட தயாராகும் நேரத்தில், அம்பயர் திடீரென கையை உயர்த்தி அவுட் கொடுத்துவிடுகிறார். அவ்வளவு நேரம் என்ன யோசித்தாரோ? தெரியவில்லை. ஆனால், பேட்ஸ்மேனுக்கு அவுட் கொடுத்துவிடுகிறார். இதனை பேட்ஸ்மேனாலும் நம்பமுடியவில்லை. விக்கெட் கீப்பர் மற்றும் பந்துவீச்சாளரும் என்ன நடக்கிறது என்பதுபோல் ரியாக்ஷன் கொடுக்கின்றனர். இந்த வீடியோ இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகியுள்ளது. இந்த வீடியோவுக்கு கமெண்ட் அடித்துள்ள நெட்டிசன்கள், ஸ்டீவ் பக்னர் 2.0, அம்பயர் நிதின் மேனன் போல் செயல்படுகிறார் என்றெல்லாம் கலாய்த்து வருகின்றனர். 

மேலும் படிக்க | ஐபிஎல்லில் டிவில்லியர்ஸ் பெரிய பிளேயர் கிடையாது: காம்பீர்

மேலும் படிக்க | Viral Video: மின்னல் வேகத்தில் பாய்ந்து இரையை துல்லியமாக பிடிக்கும் சிறுத்தை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News