செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா: 44வது FIDE செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவின் முதன்மை விருந்தினராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கலந்து கொள்கிறார் என்று கூறப்படுகிறது. ஆகஸ்ட் 9ம் தேதியான இன்று சென்னையில் நிறைவு விழா நடைபெறவுள்ளது. இப்போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். 12 நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சி நிறைவு விழாவுடன் முடிவடைகிறது.  முதலில் உக்ரைனில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த இந்த நிகழ்வானது, ரஷ்யாவின் உக்ரைன் படையெடுப்பைத் தொடர்ந்து வேறு நாட்டில் நடைபெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் செஸ் நிர்வாகக் குழுவான FIDE சென்னையை போட்டி நடத்தும் நகரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் இந்தியாவிற்கு ஹோஸ்டிங் உரிமையை வழங்க முடிவு செய்தது. ஒலிம்பியாட் ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான தொடக்க விழாவுடன் இந்த நிகழ்ச்சி தொடங்கியது, பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.  அதே நேரத்தில் அனைத்து போட்டிகளும் மாமல்லபுரத்தில் நடைபெற்றன.



மேலும் படிக்க | Asia Cup 2022: ஆசிய கோப்பை 2022க்கான இந்திய அணி அறிவிப்பு!


11 நாட்கள் தீவிரமாக நடைபெற்ற செஸ் போட்டியை காண, ஏரளமான மக்கள் படை எடுத்தனர்.  தோனி வர உள்ளதால் இறுதி நிகழ்வு பிரமாண்டமாக நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.  2008 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதில் இருந்தே MS தோனியின் சென்னையுடனான தொடர்பு தொடங்கியது. கடந்த பத்தாண்டுகளில் தோனி சென்னை அணியை 4 முறை கோப்பைக்கு அழைத்து சென்றுள்ளார்.  ஐஎஸ்எல் கால்பந்து அணியான சென்னையின் எஃப்சியின் இணை உரிமையாளராகவும் தோனி உள்ளார்.



இதற்கிடையில், சாம்பியன் பட்டத்தை வெல்ல இந்தியா கடுமையாக போராடி வருகிறது. ஓபன் பிரிவில், 9 சுற்றுகளுக்குப் பிறகு உஸ்பெகிஸ்தான் 16 மேட்ச் புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியா 2 அணியான பிரக்னாநந்தா மற்றும் டி குகேஷ் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். ஓபன் பிரிவில் மற்றொரு இந்திய அணி நான்காவது இடத்தில் உள்ளது. அதேசமயம், கோனேரு ஹம்பி மற்றும் வைஷாலி போன்றோர் அடங்கிய இந்திய மகளிர் அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. 


மேலும் படிக்க | காமன்வெல்த் போட்டிகள் - இந்தியாவுக்கு இரண்டாவது தங்கம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ