மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2019-ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் 34-வது லீக் ஆட்டம் மான்செஸ்டர் மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியல் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி மோதின.


டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. சற்று நிதானமாக விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் குவித்தது. அணியில் அதிகப்பட்சமாக விராட் கோலி 72(82) ரன்கள் குவித்தார். MS டோனி இறுதிவரை ஆட்டமிழகாமல் 56*(61) ரன்களும், ராகுல் 48(64), ஹார்திக் பாண்டயா 46(38) ரன்களும் குவித்து அணிக்கு பலம் சேர்த்தனர். 



மேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில் கேமர் ரோச் 3 விக்கெட் வீழ்த்தினார். செல்டன் கேட்ரல், ஜேசன் ஹோல்டர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதனையடுத்து 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. ஆரம்பம் முதலே சரிவை கண்டு வந்த மேற்கிந்திய தீவுகள் அணி ஆட்டத்தில் 34.2-வது பந்தில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. 


143 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்த மேற்கிந்திய தீவுகள் அணியில் அதிகப்பட்சமாக சுனில் அம்பிரஸ் 31(40) ரன்கள் குவித்தார். இந்தியா தரப்பில் மொகமது சமி 4 விக்கெட் வீழ்த்தினார். பூம்ரா, சாஹல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.


இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்தியா 11 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. வெறும் 3 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணி அரையிறுதிக்கு செல்வது கேள்விகுறியாகி உள்ளது...