டி20 உலக கோப்பையில் இருந்து விலகி கொள்கிறேன்! முக்கிய வீரர் திடீர் அறிவிப்பு!
Ben Stokes: ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் உடற்தகுதியை கருத்தில் கொண்டு டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் இருந்து விலகி கொள்கிறேன் என்று அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் முக்கிய ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தனது உடற்தகுதியில் கவனம் செலுத்த ஜூன் மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்துள்ளார். கடந்த 2022ல் இங்கிலாந்து உலகக் கோப்பையை வென்ற அணியில் பென் ஸ்டோக்ஸ் இருந்தார். வரும் ஜூன் மாதம் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ள நிலையில் தற்போதே தன்னை அணியில் இணைக்க வேண்டாம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கும் பென் ஸ்டோக்ஸ் உலக கோப்பை தொடர் முடிந்த உடன் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் விளையாட தன்னை தயார்படுத்தி வருகிறார். மேலும் எதிர்காலத்தில் அனைத்து வகையான கிரிக்கெட்டில் விளையாடுவதற்கும் தன்னை தயார் படுத்தி வருகிறார். தற்போது காயம் காரணமாக சமீபத்திய போட்டிகளில் பென் ஸ்டோக்ஸ் பந்து வீசவில்லை. இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஸ்டோக்ஸ் கூறுகையில், "நான் கடுமையாக உழைத்து வருகிறேன், மேலும் கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் ஆல்-ரவுண்டராக இருக்க எனது பந்துவீச்சு உடற்தகுதியை மீண்டும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்.
அதனால் ஐபிஎல் மற்றும் உலகக் கோப்பையில் இருந்து விலகுவது ஒரு தியாகமாக இருக்கும், இது எதிர்காலத்தில் நான் ஆல்-ரவுண்டராக இருக்க மிகவும் உதவும். சமீபத்தில் இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் எனது முழங்கால் அறுவை சிகிச்சை பந்துவீச்சில் நான் எவ்வளவு பின்தங்கியிருந்தேன் என்பதை எனக்கு எடுத்து காட்டியது. இதனால் நான் ஒன்பது மாதங்கள் பந்துவீசாமல் இருந்தேன். டெஸ்ட் தொடருக்கு முன்பு கவுண்டி சாம்பியன்ஷிப்பில் டர்ஹாமிற்காக விளையாடுவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். ஜோஸ் பட்லர் தலைமையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் அணி டி20 உலகக் கோப்பை போட்டியில் ஜூன் 4ஆம் தேதி ஸ்காட்லாந்துக்கு எதிராக பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் விளையாடிகிறது. இந்த ஆண்டு உலக கோப்பையில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்க உள்ள நிலையில் 5 அணிகள் ஒரு குழுவாக பிரிக்கப்பட்டு 4 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஜூன் 29 அன்று பார்படாஸில் நடக்கும் இறுதிப் போட்டிக்கு முன்பு, சூப்பர் 8 மற்றும் அரையிறுதி போட்டிகள் நடைபெறும்.
உலகக் கோப்பையில் ஸ்டோக்ஸ் இல்லாதது பெரிய இழப்பு - சாம் கரண்
டி20 உலகக் கோப்பையில் இருந்து ஸ்டோக்ஸ் விலகியது இங்கிலாந்துக்கு பெரும் இழப்பாக இருக்கும் என்று இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் சாம் கரண் தெரிவித்துள்ளார். "ஸ்டோக்ஸ் ஒரு நம்பமுடியாத வீரர், அவர் இல்லாதது அணிக்கு பெரிய இழப்பு. ஆனால் அவரது இந்த ஓய்வு மீண்டும் சிறந்த ஆல்-ரவுண்டராக வருவார் என்று எதிர்பார்க்கிறோம். அவர் பந்துவீசுவதில் தற்போது கவனம் செலுத்துகிறார். "இங்கிலாந்து அணியில் நிறைய திறமைகள் உள்ளன, எனவே மேற்கிந்தியத் தீவுகளுக்குச் செல்லும் வாய்ப்பு யாருக்குக் கிடைக்கிறதோ அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். இப்போது எனது கவனம் ஐபிஎல் மீது உள்ளது, அதற்குப் பிறகு உலகக் கோப்பை உள்ளது, வெற்றிபெறும் மற்றொரு அணியின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | Champions League T20: மீண்டும் வரும் சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டி! எப்போது தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ