INDvsENG: இந்திய வீரரை முறைத்த Stuart Broad-க்கு அபராதம்!
ICC விதிகளை மீறியாதாக, இங்கிலாந்து வேகப்ந்து வீச்சாளர் ஸ்ட்ரவுட் போர்ட்க்கு 15% ஊதிய அபராதம் விதிக்கப்பட்டுள்ளது!
ICC விதிகளை மீறியாதாக, இங்கிலாந்து வேகப்ந்து வீச்சாளர் ஸ்ட்ரவுட் போர்ட்க்கு 15% ஊதிய அபராதம் விதிக்கப்பட்டுள்ளது!
ICC விதிகள் Level 1-ன் படி களத்தில் இருந்து அவுட் ஆகி வெளியேறும் வீரர்களை, பந்துவீச்சளர்களோ அல்லது இதர வீரர்களோ, சைகை மூலமாகவோ, வார்த்தைகள் மூலமாகவோ இழிவு படுத்துதல் Article 2.1.7 படி குற்றமாகும்.
தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் ட்ரண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடத்து வரும் நிலைநில், இப்போட்டியில் இந்திய அணி பேட்டிங்க் செய்த போது, 92-வது ஓவரில் ரிஷாப் பந்த் அவுட் ஆகி வெளியேறினார். அப்போது இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஸ்ட்ரவுட் போர்ட் அவரை செய்கள் மூலம் இழிவு படுத்தியாதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த குற்றச்சாட்டின் மீது நடைப்பெற்ற விசாரணையில் ஸ்ட்ரவுட் போர்ட் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து ICC சட்டம் நிலை 1 விதி மீறல்களின் கீழ்... ஸ்ட்ரவுட் போர்ட்-ன் ஒரு போட்டி ஊதியாத்தில் 15% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குற்றச்சாட்டிற்காக இவருக்கு 1 டீமெடரிட் புள்ளியும் அளிக்கப்பட்டுள்ளது!
ICC சட்டம் நிலை 1 விதி மீறல்களுக்கு விதிக்கப்டும் தண்டையின் படி, போட்டியாளரின் சம்பளத்தில் அதிகபட்சம் 50% ஊதியம் அபராதமாக விதிக்கப்படும். மேலும் 1 அல்லது 2 டீமெரிட் புள்ளிகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.