இங்கிலாந்து இந்தியா அணிகளுக்கு இடையே நடைப்பெறு வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தலைவர் ஜோ ரூட் புதிய சாதனை படைத்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 


முன்னதாக டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா டி20 தொடரை வென்றது. இதனையடுத்து நடைப்பெற்ற ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து வென்று இந்தியாவை பழிதீர்த்துக் கொண்டது. இதனையடுத்து டெஸ்ட் தொடர் நேற்று முதல் துவங்கியது.


பிரிமிக்ஹான் மைதானத்தில் நடைப்பெறும் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து வருகிறது. ஆட்டத்தின் முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 88 ஓவர்கள் விளையாடி 9 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்கள் குவித்துள்ளது. ஜோ ரூட் 80(156) மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் 0(9) ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் 25 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகளை குவித்தார்.


இந்திய பந்துவீச்சில் இங்கிலாந்து வீரர்கள் பெவிலியன் திரும்பிய வண்ணம் இருக்க, மறுபுரம் அணித்தலைவர் ஜோ ரூட், குறுகிய காலத்தில் 6000 ரன்கள் கடந்த வீரர்களின் பட்டியலில் இணைந்துள்ளார்.


கடந்த 2012 ஆண்டு தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாடிய ரூட், 127 போட்டிகளில் விளையாடி 6000 ரன்கள் கடந்துள்ளார். இங்கிலாந்து வீரர்களில் குறுகிய போட்டிகளில் 6000 ரன்கள் கடந்தவர் என்னும் பெருமையினை படைத்துள்ளார்.


இந்தியாவை பொறுத்தவரையில் முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர் மற்றும் சச்சின் டெண்டுல்கர் முறையே 117, 127 போட்டிகளில் 6000 ரன்களை கடந்தனர் என்பது குறிப்படித்தக்ககது