இன்று (நவம்பர் 22) உலகக் கோப்பையின் மூன்றாவது நாளின் ஐந்தாவது ஆட்டத்தில் அர்ஜென்டினா, சவுதி அரேபியா அணிகள் மோதின. குரூப்-சியில் இடம்பெற்றுள்ள இரு அணிகளும் வெற்றியுடன் இந்த உலகக் கோப்பைத தொடரை தொடங்கும் வேண்டும் என்ற முனைப்பில் மோதின. நட்சத்திர வீரர்கள் நிறைந்த அர்ஜென்டினா அணியும் உலகக் கோப்பையை வெல்வதற்கான போட்டியில் வலுவான அணியாக உள்ளது. இந்தப் போட்டியில் அர்ஜென்டினா அணி வெற்றி பெறும் என எதிர்பார்த்த நிலையில், சவுதி அரேபியா அணி இரண்டு கோல்கள் அடித்து 2-1 என்ற கணக்கில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அர்ஜென்டினா மற்றும் சவுதி அரேபியா இடையேயான ஆட்டத்தின் முதல் பாதியின் இரண்டாவது நிமிடத்தில் லயோனல் மெஸ்ஸி கோல் அடிக்க முயன்றார், ஆனால் அவரால் கோல்கீப்பரை மீறி எதுவும் செய்யமுடியவில்லை. 10வது நிமிடத்தில் அர்ஜென்டினாவுக்கு லியோனல் மெஸ்ஸி சவுதி அரேபியாவுக்கு எதிராக பெனால்டி அடித்தார். இந்த கோலின் மூலம் அர்ஜென்டினா 1-0 என முன்னிலை பெற்றது. உலகக் கோப்பை வரலாற்றில் மெஸ்ஸி அடித்த ஏழாவது கோல் இதுவாகும். 


இப்போட்டியில் லயோனல் மெஸ்சி கோல் அடித்ததன் மூலம் வரலாறு படைத்துள்ளார். நான்கு வெவ்வேறு உலகக் கோப்பைகளில் அர்ஜென்டினாவுக்காக கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அவர் 2006, 2014, 2018 மற்றும் 2022ல் கோல் அடித்துள்ளார்.



மேலும் படிக்க: FIFA Worldcup 2022: கத்தாரில் இதையெல்லாம் செய்தால் சிறை தண்டனையா?


அர்ஜென்டினாவுக்காக லாடரோ மார்டினெஸ் இரண்டாவது கோலை அடித்தார். ஆனால் அது நடுவரால் அனுமதிக்கப்படவில்லை. இது VAR சோதனையில் ஆஃப்சைடு என்று அழைக்கப்பட்டது. அர்ஜென்டினா மற்றும் சவுதி அரேபியா இடையேயான ஆட்டத்தின் முதல் பாதி முடிந்தது. லியோனல் மெஸ்ஸி அடித்த கோலால் அர்ஜென்டினா 1-0 என முன்னிலை பெற்றது. முதல் பாதியில் அர்ஜென்டினா அதிரடியாக விளையாடியது. 


அர்ஜென்டினா மற்றும் சவுதி அரேபியா இடையேயான ஆட்டத்தின் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியதும், தொடக்கத்தில் இருந்தே சவுதி அரேபியா அபாரமான தாக்குதல் நடத்தியது. ஆட்டத்தின் 48வது நிமிடத்தில் சவுதி அரேபியா சார்பில் சலே அல்ஷெரி முதல் கோல் அடித்தார். 


53வது நிமிடத்தில் சவுதி அரேபியா தனது கோல் கணக்கை இரண்டாக உயர்த்தியது. சவுதி அரேபியா அணிக்காக சேலம் அல்த்சாரி இரண்டாவது கோலை அடித்தார். இப்போட்டியில் பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்பட்ட அர்ஜென்டினா அணி 1-2 என பின்தங்கியது. கடைசி வரை அர்ஜென்டினாவால் கோல் அடிக்க முடியவில்லை. 



மேலும் படிக்க: உலக கோப்பை கால்பந்து போட்டிகளை காண ரூ.23 லட்சத்துக்கு வீடு வாங்கிய கேரள ரசிகர்கள்


உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் அர்ஜென்டினா தோல்வியைச் சந்திக்க வேண்டியிருந்தது. குரூப் சி பிரிவில் சவுதி அரேபியா 2-1 என்ற கோல் கணக்கில் இரண்டு முறை சாம்பியனான அர்ஜென்டினாவை வீழ்த்தியது. 10வது நிமிடத்தில் கேப்டன் லியோனல் மெஸ்சி கோல் அடித்து முன்னிலை பெற்ற போதிலும் அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை. சவுதி அரேபியா சார்பில் சலே அல்செஹ்ரி 48வது நிமிடத்திலும், சேலம் அல்தவ்சாரி 53வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். சவுதி அரேபியாவின் உலகக் கோப்பை வரலாற்றில் இது மூன்றாவது வெற்றியாகும். 


இந்த தோல்வியின் மூலம் அர்ஜென்டினாவின் தொடர்ச்சியாக 36 ஆட்டங்களில் வெற்றி பயணம் முடிவுக்கு வந்தது. 1974க்குப் பிறகு முதல்முறையாக அர்ஜென்டினா தனது தொடக்க ஆட்டத்தில் இரண்டு கோல்களை எதிர் அணிக்கு விட்டுக்கொடுத்துள்ளது. அர்ஜென்டினா அணி நவம்பர் 27 அன்று மெக்சிகோவையும், நவம்பர் 30 அன்று போலந்தையும் எதிர்கொள்கிறது. காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற அர்ஜென்டினா எஞ்சிய இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டும்.


மேலும் படிக்க: தகரம் என தங்கத்தை ஒதுக்கிய சிஎஸ்கே... சாதனைகளை குவித்த ஜெகதீசன்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ