2022 உலகக் கோப்பை போட்டிகளுடன் ஓய்வு பெறுகிறேன்: மெஸ்ஸியின் அதிர்ச்சி அறிவிப்பு

Lionel Messi Retirement: கத்தாரில் அடுத்த மாத்ம் நடைபெறும் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக கால்பந்தாட்ட ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 7, 2022, 09:32 AM IST
  • பார்சிலோனா அணியின் நிதிச்சுமை தற்போது மிண்டும் அதிகரித்தது
  • கால்பந்தாட்ட ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி ஓய்வு பெறுகிறாரா?
  • கத்தார் போட்டிகளே அவரது விளையாட்டு வாழ்க்கைக்கு முற்றுபுள்ளி வைக்குமா?
2022 உலகக் கோப்பை போட்டிகளுடன் ஓய்வு பெறுகிறேன்: மெஸ்ஸியின் அதிர்ச்சி அறிவிப்பு title=

Lionel Messi Retirement: கத்தாரில் அடுத்த மாதம் நடைபெறும் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக கால்பந்தாட்ட  ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கத்தாரில் நடைபெறும் போட்டிகளுடன் பிறகு தேசிய அணியில் இருந்து ஓய்வு பெறுவாரா என்பது குறித்து லியோனல் மெஸ்சி தெளிவுபடுத்தவில்லை. லியோனல் மெஸ்சி, 1978 மற்றும் 1986ஆம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகளில் பட்டம் வெல்ல அர்ஜென்டினாவுக்கு உறுதுணையாய் இருந்தவர் மெஸ்சி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், 2022ம் ஆண்டு உலக கால்பந்து போட்டி தனது வாழ்க்கையில் கடைசியானதாக இருக்கும் என்ற அறிவிப்பு திகைப்பை ஏற்படுத்தி உள்ளது. 

35 வயதான அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, தனது ஐந்தாவது உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடுவார். இந்த ஆண்டும் கோப்பையை வெல்வோம் என்று அவர் உறுதியாக சொல்கிறார் மெஸ்சி. இந்த வார்த்தைகள் உற்சாகத்தை அளித்தாலும், இது கடைசிப்ப் போட்டியாக இருக்கும் என்று மெஸ்ஸி ஸ்டார் பிளஸ் தொலைகாட்சி நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

மேலும் படிக்க | ’கால்பந்து உலகில் பூகம்பம்’ மெஸ்ஸி பற்றி மாடல் வெளியிட்ட ரகசியம்

தனது விளையாட்டு எதிர்காலம் குறித்து மெஸ்ஸி வெளிப்படையாக பேசுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.  

நவம்பர் 20 அன்று கத்தாரில் இந்த ஆண்டு உலகக்கோப்பை கால்பந்துப் போட்டி தொடங்கவிருக்கிறது. நவம்பர் 22 ஆம் தேதி சவுதி அரேபியாவிற்கு எதிராக குரூப் சி பிரிவில் மெஸ்ஸின் அணி களம் இறங்குகிறது. மெக்சிகோ மற்றும் போலந்தை எதிர்கொள்வதற்கு முன்பு அர்ஜெண்டினா அணி சவுதி அரேபிய அணியை எதிர்கொள்கிறது.

"நாங்கள் மிகவும் நன்றாக விளையாடுவோமா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அர்ஜென்டினா அணி, கடுமையான போட்டியாளராக இருக்கும் என நம்புகிறேன்.ஆனால் உலகக் கோப்பையில் எதுவும் நடக்கலாம். , எல்லா போட்டிகளும் மிகவும் கடினமானவை. எப்போதும் நமது விருப்பமே வெற்றி பெறுவதில்லை” என்று மெஸ்ஸி தெரிவித்தார்.


 
பல மூத்த வீரர்கள் தங்கள் ஒப்பந்தங்களை முடிக்கும் வரை பார்சிலோனா தனது சம்பள சுமையை குறைக்க முடியாது என்று கிளப்பின் நிதி துணைத் தலைவர் தெரிவித்தார். இந்த சீசனுக்கான வரவுசெலவுத் திட்டத்தை முன்வைக்கும் போது, ​​எட்வார்ட் ரோமியூ, பார்சிலோனா தனது வீரர்களின் சம்பளத்தை நிர்வகிக்கக்கூடிய வரம்புகளுக்குள் பெறுவதற்கு இன்னும் இரண்டு சீசன்கள் எடுக்கும் என்று எச்சரித்தார்.

பார்சிலோனா அணி வீரர்களின் சம்பளம். பிற அணி வீரர்களுடன் ஒப்பிடும்போது மிகவும் அதிகம் ஆகும். COVID-19 தொற்றுநோயின் பொருளாதார தாக்கத்தினால், கிளப் நிதிச்சுமையில் மூழ்க, வீரர்களின் சம்பளம் முக்கியமான காரணமாக இருக்கிறது. ஜூன் மாத நிலவரப்படி பார்சிலோனாவின் நிகரக் கடன் 608 மில்லியன் யூரோக்கள் ($597 மில்லியன்) ஆகும்.

மேலும் படிக்க | புடவையில் கால்பந்து விளையாடி அசத்திய எம்.பி இணையத்தைக் கலக்கும் புகைப்படங்கள்

இந்த நிதிச்சுமையை எதிர்கொள்ளும் பொருட்டு, சமீபத்திய சீசன்களில், லியோனல் மெஸ்ஸி, லூயிஸ் சுரேஸ், அன்டோயின் கிரீஸ்மேன் மற்றும் பிலிப் கவுடின்ஹோ ஆகியோரின் சம்பளத்தை, பார்சிலோனா அணி வெகுவாக குறைத்துள்ளது. ஆனால் இந்த சீசனில் ராபர்ட் லெவன்டோவ்சி, ஜூல்ஸ் கவுண்டே மற்றும் ரபின்ஹா ​​உள்ளிட்ட பல புதிய வீரர்களை வாங்கியதால் பார்சிலோனா அணியின் நிதிச்சுமை தற்போது மிண்டும் அதிகரித்துவிட்டது.

இந்த பருவத்திற்கான மொத்த சம்பள சுமை 656 மில்லியன் யூரோக்களாக ($644 மில்லியன்) அதிகரித்துள்ளது, இந்த நிலையில் லியோனல் மெஸ்சி, ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஜகார்த்தாவில் கால்பந்து போட்டி வன்முறையில் நெரிசலில் 127 பேர் பலி

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News