32 நாடுகள் பங்குபெற்ற உலக்கோப்பை கால்பந்து தொடரில் லீக் ஆட்டங்கள், நாக் அவுட் ஆட்டங்கள் மற்றும் காலிறுதி ஆட்டங்கள் முடிவடைந்து, இன்று, நாளை அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரஷ்யாவில் நடைப்பெற்று வரும் ஃபிபா உலக்கோப்பை கால்பந்து பரப்பரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று மற்றும் நாளை அரையிறுதி போட்டிகள் நடைபெறுகிறது. நான்கு அணிகளில் எந்த அணி இறுதிபோட்டிக்கு தகுதி பெரும் என கணிப்பது சிரமம் என கால்பந்து வல்லுனர்கள் கூறியுள்ளனர். ஆட்டத்தின் போது எந்த அணி சிறப்பாக செயல் படுகிறதோ, அந்த அணி வெற்றி பெரும், மற்றபடி அரையிறுதியில் மோதும் நான்கு அணிகளும் பலம் வாய்ந்தவை தான் எனவும் கூறியுள்ளனர்.


இன்று முதல் அரையிறுதி போட்டி செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இரவு 11.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் மோதுகின்றன. இதில் பிரான்ஸ் அணி 1998 ஆம் ஆண்டு உலக்கோப்பையை வென்றுள்ளது. ஆனால் பெல்ஜியம் அணி இதுவரை கோப்பையை வென்றதில்லை. பெல்ஜியம் அணி வெற்றி பெற்றால் முதல் முறையாக உலக்கோப்பையை இறுதி போட்டிக்கு நுழையும். 


 



 


அதேபோல இரண்டாம் அறையிறுதியில் இங்கிலாந்து மற்றும் குரேஷியா அணிகள் மோதுகின்றனர். இதில் வெற்றி பெரும் அணி இறுதி போட்டிக்கு செல்லும்.


அறையிறுதியில் மோதும் நான்கு அணிகளில் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் அணிகள் மட்டும் உலக்கோப்பையை வென்றுள்ளது. பெல்ஜியம், குரேஷியா அணிகள் வெற்றி பெற்றால் முதல் முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற அணி என்ற பெருமையை பெரும்.