சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பல்வேறு நிறுவனங்களுக்கு விளம்பர தூதுவராக உள்ளார். சில நிறுவனங்களின் விளம்பர படங்களில் மட்டும் நடித்துக் கொடுத்துள்ளார். அந்தவகையில் பீஹாரில் உள்ள நியூ குளோபல் நிறுவனத்தின் விளம்பரங்களிலும் தோனி நடித்துள்ளார். ஆனால், அந்த நிறுவனம் மற்றொரு நிறுவனத்துக்கு அளித்த செக் பவுண்ஸ் ஆனதால், சம்பந்தப்பட்ட நிறுவனம் நியூ குளோபல் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்திருப்பதுடன், அந்த நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்த தோனி மீதும் வழக்கு தொடர்ந்துள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Deepak Chahar wedding: தீபக் சாஹர் திருமணத்தில் தோனி - கோலி


டிஎஸ் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம், நியூ குளோபல் புரொடியூஸ் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்துடன் உரம் தயாரிப்பு மற்றும் மார்க்கெட்டிங் தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, நியூ குளோபல் புரோடியூஸ் நிறுவனம் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உரத்தை தயாரித்து டிஎஸ் நிறுவனத்திற்கு டெலிவரி செய்தது. ஆனால், உரம் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையாகவில்லை எனக் கூறப்படுகிறது.இதனால், கொடுத்த 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான உரத்தை நியூ குளோபல் நிறுவனம் திரும்பப்பெற்றுள்ளது. அந்த உரத்துக்குரிய தொகையான ரூ.30 லட்சத்துக்கு காசோலை ஒன்றை கொடுள்ளது. 


டிஎஸ் எண்டர்பிரைஸ் நிறுவனம் அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது செல்லுபடியாகாமல் இருந்துள்ளது. இதுதொடர்பாக, நியூ குளோபல் நிறுவனத்திற்கு டிஎஸ் எண்டர்பிரைசர்ஸ் நிறுவனம் சட்டப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸூக்கு நியூ குளோபல் நிறுவனம் பதிலளிக்கவில்லை. இதனைத்தொடர்ந்து டிஎஸ் எண்டர்பிரைசஸ் நிறுவன உரிமையாளர் நீரஜ் குமார் நிராலா, நியூ குளோபல் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் ஆர்யா உள்பட 8 பேரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. 


நியூ குளோபல் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி  பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. 3 பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கின் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி ஜூன் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். 


மேலும் படிக்க | Team India: கிரிக்கெட் அரசியலில் வீழ்ந்த 2 வீரர்கள்  


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR