இந்திய வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர் தனது காதலி ஜெய பரத்வாஜ் திருமண பந்தத்தில் அடியெடுத்து வைத்துள்ளனர். இந்த விழாவில் மகேந்திர சிங் தோனி, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. புகழ்பெற்ற இசைக்கலைஞர்களின் கச்சேரிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால், திருமண விழாவில் கொண்டாட்டம் நிச்சயம்.
திருமணம் எங்கே நடக்கிறது?
ஆக்ரா ஃபதேஹாபாத் சாலையில் உள்ள பைவ் ஸ்டார் நட்சத்திர ஓட்டலில் இன்று மாலை 6 மணிக்கு வரவேற்பு விழா தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து இசைக்கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆக்ராவின் புகழ்பெற்ற சுதிர் இசைக்குழுவினர் சாஹரின் திருமண விழாவுக்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க | கேப்டன்ஷிப்ல இவரு எம்.எஸ்.தோனி மாதிரி - சஞ்சய் மஞ்சரேக்கர்
கிரிக்கெட் பிரபலங்கள்
இந்த திருமண விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பிரபலங்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தோனி, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா உள்ளிட்ட வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் இரவு நடைபெறும் இசைக்கச்சேரியில் நடனம் ஆடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேக்ஸ்வெல் திருமணத்திலேயே கோலி நடனமாடிய வீடியோ வைரலான நிலையில், இன்றைய வீடியோவை அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
சாஹர் - ஜெயா காதல்
கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின்போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டி முடிந்தவுடன் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து சாஹர் ஜெயா பரத்வாஜூக்கு காதலை வெளிப்படுத்தினார். அப்போது ஆச்சரியப்பட்ட ஜெயா பர்தவாஜ் மகிழ்ச்சியில் தனது சம்மதத்தையும் தெரிவித்தார். இவர்களின் காதல் புரோபோஸ் சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது.
ஜெயா பரத்வாஜ் யார்?
டெல்லியைச் சேர்ந்த ஜெயா பரத்வாஜ். டெலிகாம் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் அவர், சாஹருடன் காதலில் விழுந்தார். ஜெயாவின் சகோதரர் சித்தார்த் பிக்பாஸ் மற்றும் ஸ்பிளிஸ்ட்வில்லா ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். நடிகரான அவர், எம்டிவி ஸ்ப்ளிட்ஸ்வில்லா சீசன் 2 -வில் வெற்றி பெற்றுள்ளார்.
ஐபிஎல் வெளியேற்றம்
தீபக் சாஹர் ஐபிஎல் ஏலத்தில் சுமார் 14 கோடி ரூபாய் கொடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். தோனியை விட அதிக விலைக்கு கொடுத்து வாங்கப்பட்ட அவர், காயம் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் இருந்து விலகினார். 2021 ஆம் ஆண்டு தொடரில் 15 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பேட்டிங்கிலும் அவர் ஜொலிப்பதால் சிறந்த ஆல்ரவுண்டராக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | Team India: கிரிக்கெட் அரசியலில் வீழ்ந்த 2 வீரர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR