இந்தியா - மேற்கிந்தியத்தீவு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

4 டெஸ்ட் போட்டிகள் இந்த கொண்ட தொடரின் முதல் ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் உள்ளது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. மேலும் கும்ப்ளே - கோலி கூட்டணியில் இந்திய அணி சந்திக்கும் முதல் டெஸ்ட் தொடர் இது என்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


ஜேசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணியில் டேரன் பிராவோ, மார்லன் சாமுவேல்ஸ் ஆகியோர் மட்டுமே அனுபவ வீரர்களாக உள்ளனர். இருவரும் இணைந்து 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடி உள்ளனர். இதனால் இவர்களை அணி பெரிதும் நம்பி இருக்கிறது.


மேற்கிந்தியத் தீவுகள் அணி கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் 0-2 என்ற கணக்கில் இழந்தது. மேலும் கடைசியாக விளையாடிய 8 தொடர்களிலும் படுதோல்விகளை சந்தித்துள்ளது. இதனால் அந்த அணி தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிக்கக்கூடும்.


கோலி கேப்டனாக முதல் முறையாக மேற்கிந்தியத் தீவுகளில் விளையாட உள்ளார். அவரது தலைமையில் இலங்கை, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரை இந்தியா கைப்பற்றியிருந்தது. மேற்கிந்தியத் தீவுகள் தொடரையும் வென்றால் ஹாட்ரிக் வெற்றியாக அமையும்.


இந்தியா:


விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், ஷிகர் தவண், புஜாரா, ரஹானே, ரோஹித் சர்மா, விருத்திமான் சகா, கே.எல்.ராகுல், ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், முகமது ‌ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், அமித் மிஸ்ரா, ஸ்டூவர்ட் பின்னி, ‌ஷர்துல் தாக்கூர்.


மேற்கிந்தியத் தீவுகள்:


ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), கிரேக் பிராத்வெயிட், மார்லன் சாமுவேல்ஸ், டேரன் பிராவோ, லியான் ஜான்சன், பிளாக்வுட், கார்லோஸ் பிராத்வெயிட், ராஜேந்திர சந்திரிகா, ரோஸ்டன் சேஸ், டவ்ரிச், கம்மின்ஸ், கேப்ரியல், தேவேந்திர பிஷூ.