பிபா உலகக்கோப்பை 2022 தொடர் கடந்த நவ. 20ஆம் தேதி கத்தாரில் நடைபெற்று வருகிறது. கால்பந்து  உலகக்கோப்பை என்றாலே சர்ச்சையும், கொண்டாட்டமும் அதனை சுற்றிக்கொண்ட இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வீரர்களுக்குள் நடக்கும் மோதல், அணிகளின் வித்தியாசமான வெற்றி கொண்டாட்டங்கள், மைதானத்தில் ரசிகர்களின் வினோதமான செயல்கள், வீரர்களின் நடத்தைகள் என தொடர்ந்து பல விவகாரங்கள் வெடித்துக்கொண்டே இருக்கும். 


அந்த வகையில், பிபா உலகக்கோப்பை நடைபெறும் நேரங்களில், வீரர்கள், பயிற்சியாளர்கள், அணி நிர்வாக உறுப்பினர்கள் ஆகியோரின் பாலியல் ரீதியான பல்வேறு விவகாரங்களும் வெளிசத்திற்கு வந்துள்ளன. 


உலகக்கோப்பை தொடரின்போது, வீரர்கள் பாலியல் தொழிலாளர்களுடன் உறவு வைத்துக்கொள்வது, தங்கள் அணியின் சக வீரரின் மனைவிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக வீரர்கள் மீது குற்றஞ்சாட்டுவது என  இதன் விளைவுகள் உலகக் கோப்பையில் அவர்களின் அணிகளுக்கு பெரும் அழுத்தத்தை உருவாக்கியிருக்கிறது. 


இந்நிலையில், பிபா உலகக்கோப்பை நடைபெறும் நேரங்களில், கால்பந்து உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஐந்து மிகப்பெரிய பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து இங்கு காணலாம். 


1. செக் குடியரசு அணி மீதான பாலியல் குற்றச்சாட்டு


செக் குடியரசு அணி 1962ஆம் ஆண்டுக்கு பிறகு, 2010 பிபா உலகக்கோப்பையில் முதல்முதலாக தகுதிபெற்றாக வேண்டும் என முனைப்பில் இருந்தது. ஆனால், சொந்த நாட்டில் 2009ஆம் ஆண்டில் நடைபெற்ற தகுதிச்சுற்ரு போட்டிகளின்போது, அவர்களின் பயிற்சியாளர் மற்றும் 6 பேர் அணியில் இருந்து நீக்கப்பட்டதால் அவர்களின் கனவு தரைமட்டமானது. 


அவர்கள் அனைவரும் பாலியல் தொழிலாளிகளுடன் உல்லாசமாக இருந்ததாகவும், அவர்கள் பாலியல் தொழிலாளிகளுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியானதை அடுத்த அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. வீரர்கள் தாமஸ் உஜ்ஃபலுசிஸ், மிலன் பரோஸ், ராடோஸ்லாவ் கோவாக், மார்ட்டின் ஃபெனின், மரேக் மேட்ஜோவ்ஸ்கி மற்றும் வக்லாவ் ஸ்வெர்கோஸ், பயிற்சியாளர் பீட்டர் ராடா ஆகியோர் இந்த குற்றச்சாட்டால் அணியில் இருந்து நீக்கப்பட்டனர். 


2. ஃபிராங்க் ரிபெரி, கரீம் பென்செமா ஆகியோர் மீதான பாலியல் குற்றச்சாட்டு 


அதேபோல, 2010 பிபா உலகக் கோப்பைக்கு முன்னதாக, பிரான்ஸ் வீரர் ஃபிராங்க் ரிப்பரியும் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார்.  அவருடன் நட்சத்திர வீரர்கள் கரீம் பென்செமா மற்றும் சிட்னி கோவ்லூ ஆகியோர் சிக்கினர். அவர்கள் பாலியல் தொழில் நடைபெறும், இரவு விடுதிக்கு சென்றதாக மூவரின் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. பென்சிமா மற்றும் ரிப்பரி ஆகியோர் சிறுமியாக இருந்த பாலியல் தொழிலாளியுடன் உறவில் ஈடுபட்டதாக குற்றசாட்டு எழுந்தது.



மேலும் படிக்க | கிஸ் அடித்த காதலி... மைதானம் என்றும் பார்க்காத பெல்ஜியம் வீரர் - ரொமான்ஸ் வீடியோ!


3. சக நாட்டு வீரரின் மனைவியுடன் உறவில் இருந்த அமெரிக்க அணி கேப்டன்


1988 பிபா உலகக்கோப்பைக்கு சில மாதங்களுக்கு முன்பு, அமெரிக்க அணியின் பயிற்சியாளர் ஸ்டீவ் சாம்ப்ஸன், அந்த அணியின் கேப்டன் ஜான் ஹார்க்ஸை அணியில் இருந்து வெளியேறும்படி தெரிவித்தார். ஏனெனில் அவர் தனது சக வீரர் எரிக் வைனால்டாவின் மனைவியுடன் உறவில் இருந்துள்ளார். ஹார்க்ஸ் அந்த குற்றச்சாட்டை மறுத்தார். ஆனால் உலகக் கோப்பை தொடரில் அவரால் பங்கேற்க முடியவில்லை.


4. ஒட்டுமொத்தமாக சர்ச்சையில் சிக்கிய மெக்ஸிகோ அணி 


30 பாலியல் தொழிலாளர்களுடன் மெக்ஸிகன் அணியினர், 'பிரியாவிடை விருந்தில்' எடுத்த சில படங்கள் வைரலானது. 2018 ரஷ்ய பிபா உலகக் கோப்பைக்கு முன்னதாக ஒட்டுமொத்த மெக்ஸிகோவையும் இச்சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.



5. 1982 பிரான்ஸ் வீரர் மீதான பாலியல் குற்றச்சாட்டு


பிரான்ஸ் கால்பந்து வீரர் மைக்கேல் பிளாட்டினியின் மனைவியுடன், சக வீரர் ஜீன் ஃபிராங்கோயிஸ் லாரியோஸ் உறவில் இருந்துள்ளார். 1982 பிபா உலகக்கோப்பைக்கு முன், இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்து பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனை அடுத்து, அந்த உலகக்கோப்பையில் லாரியோஸிற்கு அணியில் இடமளிக்கப்படவில்லை. 


தற்போது நடைபெறும் கத்தார் உலகக்கோப்பையில் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெண் ரசிகர்களின் உடை முதல், செக்ஸ் டாய்ஸ், ஆபாச படங்கள் உள்ளிட்ட பலவற்றுக்கும் கத்தார் கட்டுப்பாடு விதித்துள்ளன. 


நடப்பு பிபா உலகக்கோப்பை தொடரில், 32 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், குரூப் சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதில் பின், நாக்-அவுட் சுற்றுப்போட்டிகள் நடைபெற உள்ளன. மேலும், வரும் டிச.18ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | FIFA world cup 2022 : ஆபாச படம், செக்ஸ் டாய்ஸ், பீர்... நீளும் தடை பட்டியல்களும், நிபந்தனைகளும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ