பிபா உலகக்கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த நவ. 20ஆம் தேதி தொடங்கிய இத்தொடரில், ஏறத்தாழ அனைத்தும் அணிகளும் தலா 1 போட்டியை விளையாடி விட்டன. உலகக்கோப்பையை கைப்பற்ற வாய்ப்புள்ள அணிகள் என கூறப்பட்ட அர்ஜென்டீனா, ஜெர்மனி அணிகள் முதல் போட்டியில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இதனால், அடுத்தடுத்த போட்டிகளை வெல்ல அந்த அணிகள் முனைப்பு காட்டும்.
இதனால், தொடரில் சிறிய அணி, பெரிய அணி இல்லாமல் அனைத்து போட்டிகளும் உயிரோட்டமாக நடைபெறும் என்று கால்பந்து ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் குரூப் எஃப் பிரிவில் இடம்பெற்றிருந்த பெல்ஜியம் - கனடா அணிகள் விளையாடின. இப்போட்டியில், பெல்ஜியம் அணி மிச்சி 44ஆவது நிமிடத்தில் அடித்த ஒரு கோலை தவிர வேறு கோல்கள் ஏதும் பதிவாகவில்லை. கனடா தரப்பில் தொடுக்கப்பட்ட அத்தனை தாக்குதல் முயற்சிகளையும், பெல்ஜியம் கோல் கீப்பர் திபாட் கோர்டோயிஸ் முறியடித்தார்.
இதன்மூலம், அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் கனடாவை வென்று, உலகக்கோப்பையை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இந்நிலையில், போட்டி முடிந்த பின் திபோட் கோர்டோயிஸ், மகிழ்ச்சி வெள்ளத்தில் அவரின் காதலியை கட்டிப்பிடித்து முத்துமிட்டு தனது உற்சாகத்தை பகிர்ந்துகொண்டார். இது மைதானத்தில் இருந்த அனைவரையும் கவனம் ஈர்த்தது.
மேலும், அதன் வீடியோவை அவரின் காதலியும், வருங்கால மனைவியுமான மிஷல் கெர்ஜிக் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதனால், அந்த வீடியோவை பகிர்ந்து, இந்த காதல் ஜோடிக்கு தங்களின் அன்பை பரிமாறி வருகின்றனர். பெல்ஜியம் கோல் கீப்பர் திபோட் கோர்டோயிஸ், கிளப் அணியான, ரியல் மேட்ரிட் அணியின் நட்சத்திர வீரராகவும் அறியப்படுகிறார்.
பிபா உலகக்கோப்பை இன்று முக்கியமான போட்டிகள் நடைபெற உள்ளன. துனிசியா - ஆஸ்திரேலியா; போலந்து - சவுதி அரேபியா; பிரான்ஸ் - டென்மார்க்; அர்ஜென்டீனா - மெக்ஸிகோ உள்ளிட்ட போட்டிகள் இன்று அடுத்தடுத்து நடக்கின்றன. மேலும், தொடரை நடத்தும் கத்தார், நேற்று செனேகல் அணியுடன் 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்து முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | பாகிஸ்தான் அதிரடி! முடிவுக்கு வருகிறதா இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ