உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது, பிபா உலகக்கோப்பையில் தனது போர்ச்சுகல் அணிக்காக விளையாடி வருகிறார். மேலும், அணியை சிறப்பாக வழிநடத்தியும் வருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவர் களத்திலும், களத்திற்கு வெளியே செய்யும் விஷயங்களுக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவரின் கால்பந்து திறமை, வெற்றி கொண்டாட்டம், உடல் கட்டுப்பாடு உள்ளிட்ட பல விஷயங்கள் ரசிகர்களை அவர் பக்கம் ஈர்க்கின்றன. இதனால், அவரை இன்ஸ்டாகிராமில் 506 மில்லியன் பேரும் (50 கோடியே 60 லட்சம்), ட்விட்டரில் 105 மில்லியன் பேரும் (10 கோடியே 50 லட்சம்) பின்தொடர்கின்றனர். 


கால்பந்து வேரூன்றாத இடங்களில் கூட இவரின் புகழ் கொடிக்கட்டி பறக்கும் அளவிற்கு செல்வாக்கு மிக்கவராக உள்ளார். மேலும், இவரின் ரசிகர் பட்டாளத்தில் பிரபலங்களும் அடக்கம். நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் ஆதர்சமாக ரொனால்டோ இருக்கிறார்.


மேலும் படிக்க | Croatia Beauties: ஃபீபா கால்பந்து மைதானத்தில் கலக்கும் வீரர்களை கவர்ந்த காதல் இணைகள்


அதேபோன்று, முன்னாள் அமெரிக்க கோல்ஃப் வீராங்கனை பைஜ் ஸ்பைரானாக், ரொனால்டோவின் தீவிர ரசிகை ஆவார். அவர் தற்போது, பிபா உலகக்கோப்பையில் போர்ச்சுகல் அணியை ஆதரித்து வருகிறார். இந்நிலையில், ரொனால்டோ மீதான ஆர்வத்தை வெளிக்காட்டும் விதமாகவும், அந்த அணி உலகக்கோப்பை வெல்ல ஊக்கமளிக்கும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என முனைப்பில், பைஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு வித்தியாசமான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.



கோல் அடித்த பின் ரொனால்டோ தனது டீ-சர்ட்டை கழட்டி, கொண்டாட்டத்தில் ஈடுபடுவதை போன்று, பைஜ்ஜும் தனது டீ-சர்ட்டை கழட்டி கொண்டாடும் வகையில் அந்த வீடியோ அமைந்துள்ளது. மேலும், இந்த கொண்டாட்டத்தை ரசிகர்கள் 'Siu' என்று அழைப்பார்கள். அதனையே, பைஜ் மீட்டுருவாக்கம் செய்துள்ளார். அந்த வீடியோ பலரும் பகிரப்பட்டு வருகிறது. ரொனால்டோவின் ரசிகர்களும் அதை பகிர்ந்து தங்களின் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 


பிபா உலகக்கோப்பை தொடரில், தனது கடைசி குரூப் போட்டியில், ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி, தென்கொரிய அணியை இந்திய நேரப்படி இன்று இரவு 8.30 மணிக்கு சந்திக்கிறது. 


மேலும் படிக்க | பிரேசில் கோல் அடித்தால் டாப்லெஸ் போட்டோ; பிரேசில் மாடல் அதிரடி அறிவிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ