மற்றொரு பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் விபத்தில் மரணம்!
ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் மரணம்.
ஆஸ்திரேலியாவின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரரும், இரண்டு முறை உலகக் கோப்பையை வென்றவருமான ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் குயின்ஸ்லாந்தில் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 46 வயதில் சைமண்ட்ஸ் விபத்தில் மரணம் அடைந்து உள்ளார். ஆஸ்திரேலியாவுக்காக அவர் 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். சனிக்கிழமை இரவு டவுன்ஸ்வில்லில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹெர்வி ரேஞ்சில் இந்த விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். சைமண்ட்ஸ் ஓட்டிச் சென்ற கார் சாலையை விட்டு வெளியே உருண்டு சென்று இந்த விபத்து நடந்து இருப்பதாக காவல்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | ஐபிஎல் மேட்ச் பிக்சிங் செய்ததாக மூன்று பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அதன் மிகச்சிறந்த ஒரு வீரரை இழந்துவிட்டது என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைவர் லாச்லன் ஹென்டர்சன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். "ஆண்ட்ரூ உலகக் கோப்பைகளில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு முக்கிய வீரராக தனது பங்கை கொடுத்துள்ளார். அவர் தனது ரசிகர்கள் மற்றும் நண்பர்களால் பெரிதும் மதிக்க தக்க ஒரு நபராக இருந்தார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் சார்பாக, ஆண்ட்ரூவின் குடும்பத்தினர், அணியினர் மற்றும் நண்பர்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
சைமண்ட்ஸ் 2003 முதல் 2007 ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவின் உலகக் கோப்பை வென்ற அணிகளில் வீரராக இருந்தார், மேலும் 2004 முதல் 2008 வரை 26 டெஸ்ட் போட்டிகளுடன் 198 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். மிடில்-ஆர்டர் பேட்டிங்கில் பெயர் பெற்ற சைமண்ட்ஸ், ஆஃப்-ஸ்பின் மற்றும் நடுத்தர வேகத்தில் பந்து வீசக்கூடிய ஒரு திறமையான ஆல்-ரவுண்டராக இருந்தார்.
சைமண்ட்ஸின் மரணம், ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களான ராட் மார்ஷ் மற்றும் ஷேன் வார்ன் ஆகியோரின் மறைவுக்குப் பிறகு நிகழ்ந்துள்ளது, இருவரும் கடந்த மார்ச் மாதம் இறந்தனர். விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குயின்ஸ்லாந்து போலீசார் தெரிவித்தனர். "இரவு 11 மணிக்குப் பிறகு, ஹெர்வி ரேஞ்ச் சாலையில், ஆலிஸ் ரிவர் பாலத்திற்கு அருகில் கார் ஓட்டிச் சென்றபோது, சாலையை விட்டு வெளியேறி உருண்டுள்ளது" என்று காவல்துறை தனது முதல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | ஓய்வு பெறுவதாக அறிவித்து திரும்ப பெற்ற சிஎஸ்கே வீரர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR