அனைத்து விதமான விளையாட்டுகளில் இருந்தும் ஓய்வு அறிவிப்பது என்பது வழக்கமான ஒன்று தான். ஆனால் அவற்றில் நிறைய உணர்ச்சிகளும், சாதனைகளும் அடங்கி உள்ளன. ஒரு சிலருக்கு மட்டுமே அவர்களின் தொழில் வாழ்க்கையில் உச்சத்தை தொட முடியும். 2024ல் பல கிரிக்கெட் வீரர்கள் ஓய்வை அறிவித்துள்ளனர். இவற்றில் சில ஓய்வு முடிவுகள் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக இந்திய அணியில் இருந்த பல வீரர்களும் ஓய்வை அறிவித்துள்ளனர். இந்த ஆண்டு ஓய்வு பெற்ற வீரர்கள் பற்றி பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஆஸ்திரேலியாவின் சாம் கான்ஸ்டாஸ் ஐபிஎல்லில் எந்த அணியில் விளையாடுகிறார் தெரியுமா?


ரோஹித் சர்மா (டி20)


2023ம் ஆண்டு சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதனையடுத்து டி20 உலகக் கோப்பையில் ரோஹித் தலைமையில் கோப்பையை வென்றது. அந்த தொடர் முழுவதும் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடி இருந்தார். குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 41 பந்துகளில் 92 ரன்கள் எடுத்தது அவரது சிறந்த ஆட்டமாகும். கோப்பையை வென்றதும் டி20 போட்டிகளில் இருந்து மட்டும் ஓய்வை அறிவித்தார்.


விராட் கோலி (டி20)


ரோஹித் சர்மாவை தொடர்ந்து டி20 உலகக் கோப்பையை வென்றதும் டி20களில் இருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி. டி20 உலக கோப்பை முழுவதும் ரன்கள் அடிக்க சிரமப்பட்ட விராட் கோலி பைனலில் சிறப்பாக விளையாடினார். 59 பந்துகளில் 76 ரன்கள் வெற்றிக்கு காரணமாக இருந்தார். 125 டி20 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் 38 அரைசதங்கள் அடித்துள்ளார்.


டேவிட் வார்னர் (அனைத்து விதமான கிரிக்கெட்)


ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார். ஆஸ்திரேலியாவுக்காக 112 டெஸ்டில், வார்னர் 8,786 ரன்கள் அடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்களில் 5வது இடத்தில் உள்ளார். 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய 6,932 ரன்களும், 110 டி20 போட்டிகளில் விளையாடி 3,277 ரன்களும் அடித்துள்ளார்.


ஜேம்ஸ் ஆண்டர்சன் (அனைத்து விதமான கிரிக்கெட்)


கடந்த ஜூலை மாதம் லார்ட்ஸில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வை அறிவித்தார். 42 வயதில் அணி நிர்வாகம் கேட்டுக்கொண்டதால் ஓய்வை அறிவித்தார். 188 டெஸ்டில் விளையாடி 704 விக்கெட்களை எடுத்துள்ளார்.


ஷிகர் தவான் (அனைத்து விதமான கிரிக்கெட்)


ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலியை தொடர்ந்து ஷிகர் தவான் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார். கடைசியாக டிசம்பர் 2022ல் இந்தியாவுக்காக விளையாடினார். இதுவரை 167 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6,793 ரன்களை அடித்துள்ளார். டி20 போட்டிகளில் 1,759 ரன்கள் அடித்துள்ளார்.


மொயீன் அலி (அனைத்து விதமான கிரிக்கெட்)


இங்கிலாந்து வீரர் மொயீன் அலி இந்த ஆண்டு ஓய்வை அறிவித்துள்ளார். 2014 முதல் 2024 வரை இங்கிலாந்து அணிக்காக விளையாடினார்.


டிம் சவுதி (அனைத்து விதமான கிரிக்கெட்)


நியூசிலாந்து வீரர் டிம் சவுதி அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார். சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு பிறகு அனைத்து வடிவங்களிலும் இருந்தும் ஓய்வை அறிவித்தார்.


ரவிச்சந்திரன் அஸ்வின் (அனைத்து விதமான கிரிக்கெட்)


அஷ்வின் ஓய்வு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பார்டர் கவாஸ்கர் தொடர் முடிவதற்குள் ஓய்வை அறிவித்து நாடு திரும்பியுள்ளார். இந்தியாவுக்காக 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 537 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 37 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


ஷகிப் அல் ஹசன் (டெஸ்ட் மற்றும் டி20)


பங்களாதேஸ் வீரர் ஷகிப் அல் ஹசன் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். 71 டெஸ்டில் 4,609 ரன்கள் அடித்துள்ளார். டி20யில் 129 போட்டிகள் விளையாடி 13 அரைசதங்கள் உட்பட 2,551 ரன்கள் அடித்துள்ளார்.


மேலும் படிக்க | ஐபிஎல் 2025ல் சிஎஸ்கே அணிக்கு தூணாக இருக்க போகும் 5 வீரர்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ