இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் பதவிக்காலம் நடந்து வரும் டி20 உலக கோப்பையுடன் முடிவுக்கு வருகிறது. மீண்டும் அப்பதவிக்கு விண்ணப்பிக்குமாறு பிசிசிஐ மற்றும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் கேட்டுக் கொண்டபோதும் அதனை டிராவிட் ஏற்காமல் நிராகரித்துவிட்டார். இதனால் புதிய பயிற்சியாளர் ஒருவரை நியமிக்கும் பொருட்டு பிசிசிஐ, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பத்தை வெளியிட்டது. பலர் ஆர்வம் தெரிவித்திருந்தாலும், கவுதம் கம்பீர் அப்பதவிக்கு சரியாக இருப்பார் என எண்ணியிருக்கிறது பிசிசிஐ. இது குறித்து அவரிடமும் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்த, அவரும் ஓகே சொல்லிவிட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சூர்யகுமார் யாதவ் கேப்டன்! விராட், ரோஹித் இனி இல்லை! கம்பீர் அதிரடி முடிவு!


அதனால், டி20 உலக கோப்பை முடிந்ததும் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் யார்? என்பதை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது. கவுதம் கம்பீர் பெயர் தான் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அந்த பொறுப்பை ஏற்க அவர் வைத்திருக்கும் கோரிக்கைகள் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கும் தனக்கு, அணியை தேர்வு செய்வது முதல் முழு அதிகாரமும் தனக்கு கொடுக்கப்பட வேண்டும் என கேட்டுள்ளார் கவுதம் கம்பீர். மேலும், ஒவ்வொரு பார்மேட்டுக்கு ஏற்ற அணியை உருவாக்க பிசிசிஐ சம்மதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கும் கவுதம் கம்பீர், தன்னுடைய முடிவுகளில் எந்த தலையீடும் இருக்கக்கூடாது என பிசிசிஐக்கு தெளிவாக தெரிவித்துள்ளார்.


பிசிசிஐ தரப்பில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு நேர்க்காணல் செய்யும்போது அவர்களிடம் கவுதம் கம்பீர் இந்த கோரிக்கைகளை எல்லாம் தெரிவித்துள்ளார். அவரும் சம்மதம் தெரிவித்துவிட்டதால், டபுள் ஹேப்பியில் இருக்கிறார் கம்பீர். டி20 உலக கோப்பை தொடர் முடிந்ததும், ஜிம்பாப்வே தொடருக்கு இளம் வீரர்கள் கொண்ட அணி செல்ல இருக்கிறது. இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கு கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான முழுநேரம் விளையாடும் இந்திய அணி செல்லும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.


நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடிய துருவ் ஜூரல், ரியான் பராக் மற்றும் மயங்க் யாதவ் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு இந்த தொடர்களில் வாய்ப்பளிக்கப்படும் என தெரிகிறது. கேப்டன்ஷிப் பொறுத்தவரையில் ரோகித் சர்மாவே இந்திய அணியின் கேப்டனாக நீடிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், டி20 உலக கோப்பையில் இருக்கும் எஞ்சிய போட்டிகளின் முடிவுகளின் அடிப்படையில் இந்திய அணியின் இருக்கும் சீனியர் பிளேயர்களின் எதிர்காலம் குறித்து இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்க இருக்கும் கவுதம் கம்பீர், பிசிசிஐ முடிவு செய்ய இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் விராட் கோலி, ரோகித் சர்மா  ஆகியோர் விளையாடுவார்கள் என்பதையும் பிசிசிஐ வட்டாரங்கள் உறுதிபடுத்தியிருக்கின்றன. 


மேலும் படிக்க | டி20 உலகக் கோப்பை: ஒரு இன்னிங்ஸில் அதிக டாட் பந்துகளை வீசிய டாப் பௌலர்கள்...!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ