டி20 உலகக் கோப்பை: ஒரு இன்னிங்ஸில் அதிக டாட் பந்துகளை வீசிய டாப் பௌலர்கள்...!

ICC T20 World Cup Dot Balls: ஐசிசி டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக டாட் பந்துகளை வீசிய டாப் பந்துவீச்சாளர்களை இங்கு காணலாம்.

  • Jun 18, 2024, 12:29 PM IST

டி20 போட்டிகளில் ஒரு டாட் பந்து என்பது முக்கிய விஷயமாகும். அந்த வகையில் வெறும் 24 பந்துகளில் பெரும்பாலான பந்துகளை டாட் பந்தாக வீசுவது மிகச் சிறப்பான ஒன்றாகும்.

1 /8

8. 2021இல் இங்கிலாந்து வீரர் மொயின் அலி மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராகவும், 2022இல் நியூசிலாந்து வீரர் டிரென்ட் போல்ட் இலங்கை அணிக்கு எதிராகவும் தலா 18 டாட் பந்துகளை வீசினர்.   

2 /8

7. 2007இல் நியூசிலாந்து வீரர் ஷேன் பாண்ட் கென்யாவுக்கு எதிராகவும், 2010இல் தென்னாப்பிரிக்கா வீரர் சார்லஸ் லாங்கேவெல்ட் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராகவும், 2007இல் இந்திய வீரர் ஆர்.பி. சிங் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராகவும், 2012இல் இங்கிலாந்து வீரர் கிரேம் ஸ்வான் ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும், 2016இல் இலங்கை வீரர் ஜெஃப்ரி வாண்டர்சே மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராகவும் தலா 19 டாட் பந்துகளை வீசினர்.  

3 /8

6.2010ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிராக மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர் கீமர் ரோச் 20 டாட் பந்துகளை வீசினார்.    

4 /8

5. அஜெந்தா மெண்டிஸ்: 2012ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இலங்கை வீரர் அஜெந்தா மெண்டீஸ் 20 டாட் பந்துகளை வீசினார். 

5 /8

4. டிரென்ட் போல்ட்: நடப்பு டி20 நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் உகாண்டா அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி வீரர் ரென்ட் போல்ட் 20 டாட் பந்துகளை வீசினார்.    

6 /8

3. ஒட்னீல் பார்ட்மேன்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்கா அணி வீரர் ஒட்னீல் பார்ட்மேன் 20 டாட் பந்துகளை வீசினார்.  

7 /8

2. தன்சிம் ஹசன் ஷாகிப்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச வீரர் தன்சிம் ஹசன் ஷாகிப் 21 டாட் பந்துகளை வீசினார்.   

8 /8

1. லோக்கி பெர்குசன்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் பப்புவா நியூ கினியா அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வீர்ர பெர்குசன், தான் வீசிய 24 பந்துகளில் ஒரு ரன்னை கூட கொடுக்காமல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். 4 ஓவர்களையும் மெய்டனாக வீசியது டி20 உலகக் கோப்பையில் இவர் மட்டும்தான். சர்வதேச டி20 அரங்கில் பெர்குசன் 4வது வீரர் ஆவார்.