கடவுள் எனக்கு பெரிதாக ஒன்றை வைத்திருக்கிறார்... வாய்ப்பு கிடைக்காத இந்திய வீரர் நம்பிக்கை!
WI vs IND: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், தனக்கு வருங்காலத்தில் பெரிய வாய்ப்பு காத்திருக்கலாம் என ஜித்தேஷ் சர்மா நம்பிக்கை தெரிவித்தார்.
WI vs IND: இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 2023 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய மிகவும் நிலையான ஆட்டக்காரர்களில் ஜிதேஷ் ஷர்மாவும் ஒருவராக இருந்தார். மேலும் அவரது ஸ்டிரைக் ரேட் 159.24 ஆகும். இந்த தொடரில் அவர் போட்டியில் 500 ரன்களுக்கு மேல் குவித்தார். காயம் காரணமாக ரிஷப் பந்த் ஒதுங்கிய நிலையில், அவருக்கு பதிலாக ஒரு விக்கெட் கீப்பர் பேட்டரை இந்திய கிரிக்கெட் அணி தேடி வருகிறது.
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக, ஜிதேஷின் பெயர் அடிபட்டது. இருப்பினும், வெள்ளை-பந்து கிரிக்கெட்டில் இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோருடன் தேர்வுக் குழு தேர்வு செய்தது.
சமீபத்தில் அவர் விளையாட்டு தொடர்பான ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் ஜிதேஷ் சர்மா தான் மேற்கு இந்திய தீவுகளில் தேர்ந்தெடுக்காதது குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. அவர் ஒரே ஒரு வாக்கியம் தான் சொன்னார்,'கடவுள் எனக்காக ஒரு பெரிய திட்டத்தை வைத்திருக்கிறார்'" என்றார்.
நியூசிலாந்து மற்றும் இலங்கைக்கு எதிராக உள்நாட்டில் நடைபெற்ற தொடரின் இந்திய அணியில் ஜிதேஷ் இடம்பெற்றிருந்தார். அணியுடனான தனது அனுபவங்கள் மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் இருந்து தான் கற்றுக்கொண்டவற்றை அவர் அந்த பேட்டியில் மனந்திறந்தார்.
மேலும் படிக்க | விராட் கோலி ஒன்னும் சூப்பர் இல்லை, வார்னர் இனி அவ்வளவு தான் - ஆகாஷ் சோப்ரா
"அவர்கள் என்னை மிகவும் வரவேற்கும் வகையில் செயல்பட்டனர். ராகுல் டிராவிட் என்னிடம், 'நீங்கள் மிகவும் சிறப்பாக செயல்படுகிறீர்கள், இந்த வகையான வீரர்களைத்தான் நாங்கள் தேடுகிறோம்' என்றார். நான் பெரிய ரன்களை எடுக்க விரும்புகிறேன் என்று அவரிடம் சொன்னபோது, அவர் என்னிடம் இவற்றை கூறினார். 'நீங்கள் விளையாடும் பேட்டிங் ஆர்டரில், ரன்கள் முக்கியமில்லை, போட்டியில் ஏற்படுத்தும் தாக்கம் தான் முக்கியம்.
வெற்றிக்கு நீங்கள் எவ்வளவு தூரம் பங்களிப்பீர்களோ, அதுவே அணிக்கு முக்கியமானதாக இருக்கும். போட்டியில் அணிக்கு சரிவு ஏற்பட்டு 7-8 ஓவர்களில் நீங்கள் பேட் செய்யும் நிலை வரலாம். அப்போது அணியில் 4-5 விக்கெட்டுகள் வீழ்ந்திருக்கும். அந்த சூழலில் உங்களால் அதிகம் செய்ய முடியாது, உங்கள் விளையாட்டில் நம்பிக்கை இருக்க வேண்டும். அந்த ஸ்கோரை ஒரு குறிப்பிட்ட நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும், இதனால் அணி போராட முடியும்' என்று அவர் சொன்னார்" என்று ஜித்தேஷ் சர்மா கூறினார்.
இந்திய அணி மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. வரும் ஜூலை 12ஆம் தேதி டெஸ்ட் போட்டியுடன் தொடர் தொடங்குகிறது. அடுத்த மாதம் தொடக்கத்தில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அங்கு நடைபெறுகிறது. இதற்கான அணி சமீபத்தில் பிசிசிஐயால் அறிவிக்கப்பட்டது. அதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட், ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா போன்றோர் சேர்க்கப்படவில்லை. இருப்பினும், ஜெய்ஸ்வால், திலக் வர்மா உள்ளிட்ட ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | உலகக்கோப்பையில் ரிஷப் பண்ட் என்ட்ரி...? புதிய அப்டேட் சொல்லும் நிர்வாகிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ