உலகக்கோப்பையில் ரிஷப் பண்ட் என்ட்ரி...? புதிய அப்டேட் சொல்லும் நிர்வாகிகள்!

ரிஷப் பண்டின் ரீ-என்ட்ரி குறித்து ஒரு பெரிய கேள்வி உள்ளது என்றும் அவர் விரைவில் களத்தில் இறங்குவார் என்று நான் நம்புகிறேன் என்றும் டெல்லி கிரிக்கெட் நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Written by - Sudharsan G | Last Updated : Jul 8, 2023, 11:16 PM IST
  • கடந்த டிசம்பரில் ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கினார்.
  • தற்போது பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் மறுவாழ்வில் இருக்கிறார்.
  • விரைவில் அவர் ரீ-என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்ப்பு.
உலகக்கோப்பையில் ரிஷப் பண்ட் என்ட்ரி...? புதிய அப்டேட் சொல்லும் நிர்வாகிகள்! title=

டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (DCA) இயக்குநர்கள் ஷியாம் சர்மா மற்றும் ஹரிஷ் சிங்லா தலைமையிலான குழு இந்திய விக்கெட் கீப்பர், பேட்டர் ரிஷப் பண்டை தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) சந்தித்தது. பண்ட் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் விபத்தில் இருந்து மீண்டு மறுவாழ்வு பெற்று வருகிறார். 

அவர் தனது சமூக ஊடக பதிவுகள் மூலம் தான் குணமடைந்து வருவதை பற்றி தனது ரசிகர்களை அடிக்கடி அப்டேட் செய்து வருகிறார். அவற்றில் அவர் ஜிம்மிற்கு செல்வது, பிறர் உதவி இல்லாமல் நடப்பது மற்றும் தனது சக தோழர்களுடன் தனது வழக்கமான வேடிக்கையான முறையில் பேசிக்கொள்வது போன்றவற்றை காணலாம்.

ரிஷப் பண்ட் தனது மீட்சியில் மிகப்பெரிய உறுதியையும், மனதிடத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். அவரை மகிழ்விப்பதற்காக அவர் விரைவில் திரும்புவார் என்ற நம்பிக்கையில் அவரது அபிமானிகளும் பின்பற்றுபவர்களும் அவரது முன்னேற்றத்தைப் பின்தொடர்ந்து வருகின்றனர். பண்ட் குணமடைந்து வருவதாக கூறிய ஷியாம் ஷர்மா, அவர் விரைவில் களத்தில் இறங்குவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் படிக்க | பிறந்தநாளை தனது 'செல்லங்களுடன்' கொண்டாடிய தோனி... அவரே பகிர்ந்த வீடியோ இதோ!

"அவர் குணமடைந்து நன்றாக இருக்கிறார், இப்போது அவர் மிகவும் நன்றாக இருக்கிறார். அவரது ரீ-என்ட்ரி குறித்து ஒரு பெரிய கேள்வி உள்ளது, அதற்கு நேரம் எடுக்கும், ஆனால் அவர் விரைவில் களத்தில் இறங்குவார் என்று நான் நம்புகிறேன்," என்று ஷியாம் செய்தியாளரிடம் கூறினார். அவர் அக்டோபர் - நவம்பர் மாதத்தில் இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐசிசி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்ப்பு எழுகிறது.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023இன் போது, பண்ட் தனது அணியான டெல்லி கேப்பிட்டல்ஸ் அவர்களின் சில போட்டிகளில் உடன் சென்று ஸ்டாண்டில் இருந்து விளையாட்டை ரசித்தார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் இல்லாமல் ஒரு மோசமான செயல்திறனை வழங்கியது. தொடரில் அந்த அணி கடைசி இடத்தைப் பிடித்தது.

ரிஷப் பண்ட் டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் கார் விபத்தில் சிக்கினார் மற்றும் பல காயங்களுக்கு ஆளானார். விபத்தைத் தொடர்ந்து, டெஹ்ராடூனில் ஆரம்ப சிகிச்சைக்குப் பிறகு, சிறந்த மற்றும் சிறப்பு மருத்துவ சிகிச்சைக்காக அவர் விமானம் மூலம் மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மேலும் படிக்க | வெஸ்ட் இண்டீஸூக்கு எதிராக ரோகிச் சர்மாவுடன் ஓப்பனிங் சுப்மான் கில் இல்லை - டிராவிட் பிளான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News