2021 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை துபாயில் நடந்து முடிந்தது. நவம்பர் 14 ஆம் தேதி நடைபெற்ற டி20 சாம்பியன் டைட்டில் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா முதல் முறையாக கோப்பையை வென்றது. அடுத்து 2022 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது என அனைவருக்கும் தெரியும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் 2024 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை தொடர் (T20 World Cup) எங்கு நடைபெறும் என்ற விவாதம் நடைபெற்று வருகிறது. தற்போது வரை கிடைத்த தகவலின்படி, அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை தொடர் நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது. யுனைடெட் ஸ்டேட்ஸ் கிரிக்கெட் (United States National Cricket Team) மற்றும் கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் (West Indies Cricket Board) டி20 உலகக் கோப்பை 2024 தொடரை நடத்துவதற்கு கூட்டாக ஏலம் எடுக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.


சிட்னி மார்னிங் ஹெரால்டில் (Sydney Morning Herald) வெளியான செய்தியில், "2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டியை சேர்ப்பதற்கான முயற்சியில், டி20 உலகக் கோப்பையை நடத்துவதற்கு ஐசிசி அமெரிக்காவைத் தேர்ந்தெடுக்கலாம்" என்று மேற்கோள்காட்டி உள்ளது.


ALSO READ | இந்தியாவில் நடைபெறப்போகும் 3 உலக கோப்பை போட்டிகள்!


அந்த அறிக்கையின்படி, டி20 உலகக் கோப்பையை அமெரிக்காவில் நடத்த முடிவு செய்யப்படலாம். அது மட்டுமின்றி 2024 டி20 உலகக் கோப்பையில் 20 அணிகள் மற்றும் 55 போட்டிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அறிக்கையின்படி, "2014 வங்கதேசத்தில் நடந்த டி20 உலகக் கோப்பைக்குப் (T20 World Cup) பிறகு இந்தியா, இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியா நடத்தும் முதல் உலகளாவிய போட்டி இதுவாக இருக்காது. ஒரே ஆண்டில் இந்த மூன்று நாடுகளும் செய்த மாற்றங்களால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஆகியவை 2015 முதல் 2023 வரை விளையாட்டு நிகழ்வை நடத்தும்.


T20 WC ஆண்டு

T20 WC வென்ற அணி

T20 WC தொடரை நடத்திய நாடு

2007

இந்தியா

தென்னாப்பிரிக்கா

2009

பாகிஸ்தான்

இங்கிலாந்து

2010

இங்கிலாந்து

வெஸ்ட் இண்டீஸ்

2012

மேற்கிந்திய தீவுகள்

இலங்கை

2014

இலங்கை

பங்களாதேஷ்

2016

வெஸ்ட் இண்டீஸ்

இந்தியா

2021

ஆஸ்திரேலியா

ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

2022

 - 

ஆஸ்திரேலியா


ALSO READ | 2025-ல் பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா பங்கேற்குமா?


இந்த அணிகள் பட்டத்தை வென்றன: டி20 உலகக் கோப்பை 2007 ஆம் ஆண்டு முதல் முறையாக விளையாடப்பட்டது, இதில் இந்தியா வென்றது. இதன்பிறகு, பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் 1-1 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள நிலையில், மேற்கிந்திய தீவுகள் அதிகமாக 2 முறை  கோப்பைகளை வென்றுள்ளன.


ALSO READ | Cricket: ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட்டின் எந்த வடிவம் சேர்க்கப்படும்? T20 இல்லை!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR