டி20 உலகக்கோப்பையில் ஹாட்ரிக் எடுத்தவருக்கு இத்தனை கோடியா? - ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக...
டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் எடுத்த அயர்லாந்து வீரர் ஜோஷ்வா லிட்டில், பல கோடி ரூபாய்க்கு குஜராத் அணி வாங்கியுள்ளது.
ஐபிஎல் 2023 தொடரை முன்னிட்டு நடத்தப்பட்ட மினி ஏலத்தில் பல்வேறு அணிகள் தங்களுக்கு தேவையான முக்கிய வீரர்களை வாங்கிவிட்டன. சென்னை அணி ரூ.16.25 கோடியில் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை எடுத்துவிட்டு, தனது கடமையை செம்மையாக முடிந்துள்ளது.
அதேபோன்று, அனுபவ வீரர் ரஹானே, நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் கைல் ஜேமீசன் ஆகியோரையும் எடுத்து, அணியை சமன்நிலைப்படுத்தியுள்ளது சிஎஸ்கே. தொடர்ந்து, இளம் வீரர்களான ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, பகத் வர்மா, அஜய் மண்டல் ஆகியோரையும் சென்னை அணி எடுத்துள்ளது.
அதேபோன்று, ஏலத்தில் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட சாம் கரனை சென்னை அணியால் எடுக்க முடியாவிட்டாலும், அவர், 18.50 கோடி ரூபாய்க்கு ஏலம் பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். ஐபிஎல் தொடரில் அவர் சென்னை அணிக்கு விளையாடுவதற்கு முன்பு பஞ்சாப் அணியில்தான் விளையாடியிருந்தார்.
மேலும் படிக்க | IPL 2023 Auction:'கப்பு' எங்களுக்கு தான்.. ஏலத்தை நிறைவு செய்த குஜராத் டைட்டன்ஸ்!
ஆனால், ஏலத்தில் அதிக தொகைக்கு போவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சிலர் குறைந்த தொகைக்கும், பலரோ எந்த அணிகளாலும் எடுக்கப்படாமலும் உள்ளனர். அந்த வகையில், சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட பலரின் சாய்ஸாக இருந்த 23 வயதே ஆன ஜோஷ்வா லிட்டில் குஜராத் அணியால் ரூ.4.4 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.
இவர் சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். அடிலெய்டில் நடைபெற்ற லீக் போட்டியின் 19ஆவது ஓவரில், கேன் வில்லியம்சன், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர் ஆகியோரை வீழ்த்தியிருந்தார் லிட்டில். மொத்தம், அந்த தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
ஆடவர் உலகக்கோப்பை வரலாற்றிலேயே ஹாட்ரிக் விக்கெட் எடுத்த 6ஆவது வீரர் என்ற பெருமையுடன், லிட்டில் ஐபிஎல் ஏலத்திலும் பதிவு செய்திருந்தார். அதுவும், தனது அடிப்படை தொகையை ரூ. 50 லட்சமாக வைத்திருந்தார். அவரை எடுக்க குஜராத் - லக்னோ அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் இவரை குஜராத் ரூ. 4.4 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. டெத் ஓவர்களில் எதிரணிக்கு சிம்மசொப்பனாக திகழும் லிட்டில், இடதுகை பந்துவீச்சாளர் என்பது கூடுதல் சிறப்பு.
கடந்த முறை சாம்பியன் பட்டத்தை வென்ற குஜராத், தங்களின் வேகப்பந்துவீச்சளாரான பெர்குசனை கொல்கத்தா அணிக்கு கொடுத்துவிட்டால், அதனை ஈடுகட்ட அதே வேகத்தை தற்போது நாடியுள்ளது. இவர் ஷமி, இதே மினி ஏலத்தில் எடுக்கப்பட்ட ரொமாரியோ ஷெப்பேர்டு ஆகியோருடன் ஜோஷ் லிட்டிலும் இணைந்துள்ளனர்.
மினி ஏலத்திற்கு முன்பாக பெரிதும் எதிர்பார்ப்பு இல்லாமலேயே லிட்டில் காணப்பட்டார். ஆனால், சுரேஷ் ரெய்னா ஏலம் நெருங்கிய வேளையில், லிட்டில் நிச்சயம் பெரிய தொகைக்கு ஏலம் போகக்கூடியவர் என்றும் பலரும் அவரை முயற்சிக்க வேண்டும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | 17.50 கோடிகளை கொட்டி மும்பை இந்தியன்ஸ் தூக்கிய கேம்ரூன் கிரீன்! யார் இவர்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ