Indian Premier League 2024: இந்தியன் பிரீமியர் லீக் என்றழைக்கப்படும் 17ஆவது ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்த போட்டியை எதிர்பார்த்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலக காத்திருக்கிறது எனலாம். ஏனென்றால், தோனியும் விராட் கோலியும் மீண்டும் ஒரே போட்டியில் களம்காண்பதை பார்ப்பதற்காக... 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது ஒருபுறம் இருக்க வரும் ஐபிஎல் தொடரில் முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே தற்போது வெளியாகி உள்ளது. மார்ச் 22ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 7ஆம் தேதி வரை மட்டுமே போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெறுவதால் முதற்கட்ட அட்டவணையை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டிருந்தது.


ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டியா...?


அந்த வகையில் மக்களவை தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளதை தொடர்ந்து, ஐபிஎல் தொடரில் மீதம் உள்ள போட்டிகளின் அட்டவணையும் கூடிய விரைவில் வெளியாகும் என தெரிகிறது. இதையொட்டி, மீதம் உள்ள இரண்டாம் கட்ட போட்டிகள் அனைத்தும் கொரோனா காலத்தில் நடைபெற்றதை போன்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகின. 


மேலும் படிக்க | 'தோனிக்கு எப்போதும் நன்றி உள்ளனவாக இருப்பேன்...' காரணத்தை கூறிய அஸ்வின்


இருப்பினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக யாரும் கருத்து தெரிவிக்காத நிலையில், இந்த தகவல்கள் இணையத்தில் வைரலாகின. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஐபிஎல் போட்டிகள் மாற்றப்படலாம் என்ற அந்த தகவல்களை கேட்டு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் சோகத்தில் மூழ்கினர். மேலும், இதுகுறித்து இணையத்திலும் தொடர்ந்து பதிவிட்டு வந்தனர். 


குஷியில் தோனி ரசிகர்கள்


இந்நிலையில், ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்படும் என வெளியான தகவலுக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்கப்பட்டதற்கு,"இல்லை, ஐபிஎல் போட்டிகள் வெளிநாட்டிற்கு மாற்றப்படாது" என தெரிவித்துள்ளார். இதன்மூலம், மீதம் உள்ள லீக் போட்டிகள், பிளே ஆப் சுற்று போட்டிகள் இந்தியாவிலேயே நடைபெறும் என்பது உறுதியாகி உள்ளது.


குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி சென்னையில்தான் தனது பிரியாவிடை போட்டியை விளையாடுவேன் என தெரிவித்திருந்தால் ஜெய் ஷாவின் இந்த கருத்து தோனி ரசிகர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது எனலாம். இதுதான் தோனியின் கடைசி ஐபிஎல் சீசன் என கூறப்படுகிறது. 


எனவே, ரசிகர்கள் சோர்ந்து போகாமல் சேப்பாக்கத்தில் தோனியின் வெறியாட்டத்தை காண தயாராகலாம். முதற்கட்டமாக வெளியாகி உள்ள அட்டவணையில் சென்னை அணிக்கு 4 போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஆர்சிபி மற்றும் குஜராத் அணிகளுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகள் சேப்பாக்கத்திலும், டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு எதிரான போட்டிகள் முறையே விசாகப்பட்டினம், ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. இதன்மூலம், சென்னை சேப்பாக்கத்தில் இன்னும் 5 போட்டிகள் நடைபெறும் என்பதையும் ரசிகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.


மேலும் படிக்க | IPL 2024: தோனியின் மாஸ்டர் பிளான்! சென்னை அணியில் உள்ள டாப் 5 பவுலர்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ