Indian Premiere League 2024: ஐபிஎல் 2024 போட்டியின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் விளையாடுகிறது. கடந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாக செயல்பட்ட சென்னை அணி இந்த முறையும் கோப்பை வெல்ல தீவிரமாக பயிற்சியில் உள்ளது.
கடந்த ஆண்டு சென்னை அணிக்கு பேட்டிங், பவுலிங் என இரண்டும் சிறப்பாக இருந்தது. இதன் காரணமாக கோப்பையை வென்றது. ஸ்டம்புகளுக்குப் பின்னால் இருந்து செயல்படும் தோனியின் புத்திசாலித்தனத்தால் பவுலர்களும் சிறப்பாக செயல்படுகின்றனர். இந்த ஆண்டு சென்னை அணியில் கலக்க இருக்கும் டாப் 5 பவுலர்களை பற்றி பார்ப்போம். .
மேலும் படிக்க | "பும்ரா, ஹர்திக் பாண்டியா கதை அன்னைக்கே முடிஞ்சிக்கும்" - காப்பாற்றிய ரோஹித் சர்மா
துஷார் தேஷ்பாண்டே
மும்பையை சேர்ந்த சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளரான துஷார் தேஷ்பாண்டே கடந்த சீசனில் 16 போட்டிகளில் மொத்தம் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். அவரது ஸ்விங் பந்துவீச்சை பேட்ஸ்மேன்கள் கையாள்வது பெரும்பாலும் கடினம். 9.92 ரன் ரேட் மற்றும் 16.23 ஸ்ட்ரைக் ரேட்டில் பந்து வீசி உள்ளார். அதிகபட்சமாக துஷார் தேஷ்பாண்டே ஐபிஎல் 2023ல் 45/3 விக்கெட் வீழ்த்தினார்.
ரவீந்திர ஜடேஜா
ரவீந்திர ஜடேஜா இந்திய அணியின் ஒரு சிறப்பான ஒரு ஆல்-ரவுண்டர் ஆவார், அவர் ஐபிஎல்லில் தனது பந்துவீச்சின் மூலம் முக்கியமான போட்டிகளில் விக்கெட்டுகளை எடுத்து வெற்றியை திருப்புவார். கடந்த சீசனில் 16 போட்டிகளில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். ஐபிஎல் 2023ல் வெறும் 7.56 ரன் விதிக்கத்தில் 20 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார் ஜடேஜா. அவரது சிறந்த பந்துவீச்சு புள்ளிவிவரங்கள் 20/3 ஆகும்.
மதீஷ பத்திரன
ஸ்ரீலங்கா அணியின் வலது கை வேகப்பந்து வீச்சாளரான மதீஷ பத்திரன சென்னை அணிக்கு முக்கியமான பவுலராக உள்ளார். லசித் மலிங்காவைப் போலவே பந்து வீசும் இவர் துல்லியமான யார்கர் போடுவதில் வல்லவர். ஐபிஎல் 2023ல் 8.0 என்ற பொருளாதாரத்தில் 12 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி உள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு புள்ளிவிவரங்கள் 15/3 ஆகும்.
தீபக் சாஹர்
தீபக் சாஹர் கடந்த ஆண்டு 10 போட்டிகளில் இருந்து மொத்தம் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி பவர் பிளேவில் தான் ஒரு சிறந்த பவுலர் என்பதை மீண்டும் உறுதிபடுத்தினார். 8.73 ரன் விதிதத்தில் மற்றும் 15.69 ஸ்ட்ரைக் ரேட்ல் சிறப்பாக பந்து வீசி இருந்தார்.
மகேஷ் தீக்ஷனா
ஸ்ரீலங்கா அணியை சேர்ந்த சுழல் ஜாம்பவான் மகேஷ் தீக்ஷனா 13 போட்டிகளில் 11 விக்கெட்டுகளுடன், ஐபிஎல் 2023ல் சிஎஸ்கே கோப்பையை வெல்ல பெரிதும் உதவினார். குறிப்பாக ஐபிஎல் அரையிறுதி போட்டியில் சிறப்பாக பந்துவீசி இருந்தார். 8.0 என்ற பொருளாதாரத்தில் 26.72 ஸ்ட்ரைக் ரேட்டில் துல்லியமான பந்து வீசினார்.
சிஎஸ்கே அணி:
விக்கெட் கீப்பர்கள்: எம்எஸ் தோனி, டெவோன் கான்வே, அவனிஷ் ராவ் ஆரவெல்லி.
பேட்டர்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், ஷேக் ரஷீத், அஜிங்க்யா ரஹானே, சமீர் ரிஸ்வி.
ஆல்ரவுண்டர்கள்: மொயீன் அலி, சிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சான்ட்னர், அஜய் மண்டல், நிஷாந்த் சிந்து, ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், ஷர்துல் தாக்கூர்.
பந்துவீச்சாளர்கள்: தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மதீஷா பத்திரனா, சிமர்ஜீத் சிங், பிரசாந்த் சோலங்கி, மஹீஷ் தீக்ஷனா, முஸ்தபிசுர் ரஹ்மான், முகேஷ் சவுத்ரி.
மேலும் படிக்க | தோனிக்கு இது கடைசி ஐபிஎல் போட்டியா? டுவைன் பிராவோ முக்கிய அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ