Ranji Trophy 2024, Tamil Nadu vs Karnataka: இந்தியாவின் மிகவும் பாரம்பரியமிக்க உள்நாட்டு முதல் தர கிரிக்கெட் தொடர் என்றால் அது ரஞ்சி டிராபிதான். 2024ஆம் ஆண்டுக்கான ரஞ்சி டிராபி சீசன் ஜன. 5ஆம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரஞ்சி கோப்பை தொடரில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகள் நான்கு எலைட் குரூப்களாகவும் மற்றும் ஒரு பிளேட் குரூப்பாகவும் பிரிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒவ்வொரு எலைட் குரூப்பிலும் 8 அணிகள் இடம்பெற்றிருக்கும். பிளேட் குரூப்பில் 6 அணிகள் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றை இதில் காணலாம். 


எலைட் குரூப்கள்


குரூப்-ஏ: சௌராஷ்டிரா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ராஜஸ்தாந், விதர்பா, ஹரியானா, சர்வீசஸ், மணிப்பூர் 


குரூப்-பி: பெங்கால், ஆந்திரா, மும்பை, கேரளா, சத்தீஸ்கர், உத்தர பிரதேசம், அசாம், பிகார்


குரூப்-சி: கர்நாடகா, பஞ்சாப், ரயில்வேஸ், தமிழ்நாடு, கோவா, குஜராத், திரிபுரா, சண்டிகர்


குரூப்-டி: மத்திய பிரதேசம், உத்தரகாண்ட், ஹிமாச்சல் பிரதேசம், பரோடா, டெல்லி, ஒடிசா, பாண்டிசேரி, ஜம்மு & காஷ்மீர்


பிளேட் குரூப்: நாகலாந்து, ஹைதராபாத், மேகாலயா, சிக்கிம், மிஸோரம், அருணாச்சல பிரதேசம்.


ரஞ்சி கோப்பை ஃபார்மட்


அதாவது, எலைட் குரூப்பில் ஒவ்வொரு அணியும் தங்கள் குரூப்பில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 1 போட்டி குரூப் சுற்றில் மொத்தம் 7 போட்டிகளை விளையாடும். குரூப் சுற்று முடிவில், ஒவ்வொரு குரூப்பிலும் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் சுற்றுகளுக்கு முன்னேறும். நான்கு காலிறுதிப் போட்டிகள், இரண்டு அரையிறுதிப் போட்டிகளுக்கு பின் வரும் மார்ச் 10ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும். பிளேட் குரூப்பிற்கு தனியே இறுதிப்போட்டி பிப்.17ஆம் தேதி நடைபெறுகிறது.


மேலும் படிக்க | Ishan Kishan: வெளியே அனுப்பிய ரோகித்... பாண்டியாவுடன் கூட்டணி போட்ட இஷான்!


இதில், எலைட் குரூப்பில் இடம்பெற்றுள்ள 32 அணிகளில் இந்த சீசனில் மோசமாக விளையாடிய 2 அணிகள், அடுத்த சீசனில் பிளைட் குரூப்பில் தள்ளப்படுவார்கள். பிளைட் குரூப்பில் சிறப்பாக செயல்பட்ட டாப் 2 அணிகள் அடுத்த சீசனில் எலைட் குரூப்பில் இடம்பெறும். அந்த வகையில், ஆறாவது சுற்று போட்டிகள் நாளை முதல் தொடங்குகின்றன. இதுவரை ஒவ்வொரு அணிகள் 5 போட்டிகளில் விளையாடி உள்ளன. 


ஆறாவது சுற்று போட்டிகள்


இந்நிலையில், ஆறாவது சுற்றில் குரூப்-சிஇல் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் மோதும் போட்டி நாளை முதல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த சீசனில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஒரு ஒரு போட்டி இதுதான். குரூப் சுற்று போட்டிகள் நான்கு நாள்கள் நடைபெறும் என்பதால், நாளை முதல் வரும் திங்கட்கிழமை (பிப். 12) வரை இப்போட்டி நடைபெற உள்ளது. 


இரு அணிகளும் 5 போட்டிகளில் விளையாடி 3இல் வெற்றியும், 1 தோல்வியும், 1 டிராவும் என 21 புள்ளிகளை பெற்றுள்ளன. நெட் ரன்ரேட் அடிப்படையில் தமிழ்நாடு முதலிடத்திலும், கர்நாடகா இரண்டாமிடத்திலும் உள்ளன. நாக்-அவுட் சுற்றுக்கு தகுதிபெற இரு அணிகளும் முட்டி மோதும் நிலையில், இந்த போட்டியும் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இலவச அனுமதி...


குறிப்பாக, இந்த போட்டியை காண சேப்பாக்கம் மைதானத்தில் C,D,E Lower என மூன்று ஸ்டாண்டுகளில் பார்வையாளர்களுக்கு நாளை முதல் அடுத்த நாள்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு நான்காவது நுழைவுவாயில் வழியாக நீங்கள் செல்ல வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 


நாளைய போட்டியில் சாய் சுதர்சன், சாய் கிஷோர், நாராயண் ஜெகதீசன், விஜய் சங்கர் ஆகியோர் இடம்பெற வாய்ப்புள்ளது. தற்போது இந்திய அணிக்கும் போட்டி இல்லை என்பதால் வாஷிங்டன் சுந்தர் விளையாடவும் அதிக வாய்ப்புள்ளது. கர்நாடக தரப்பில் மயாங்க் அகர்வால் விளையாட வாய்ப்பில்லை என்றாலும் தேவ்தத் படிக்கல் இடம்பெறுவார்.


இரு அணிகளின் ஸ்குவாட்


தமிழ்நாடு: சாய் கிஷோர் (கேப்டன்), பிரதோஷ் ரஞ்சன் பால் (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சன், நாராயண் ஜெகதீசன், பாபா இந்திரஜித், விஜய் சங்கர், எஸ். லோகேஷ்வர், அஜித் ராம், பி.சச்சின், எம்.முகமது, சந்தீப் வாரியர் , டி.நடராஜன், விமல் குமார், திரிலோக் நாக்.


கர்நாடகா: மயங்க் அகர்வால் (கேப்டன்), ஆர். சமர்த், தேவ்தத் படிக்கல், நிகின் ஜோஸ் (துணை கேப்டன்), மணீஷ் பாண்டே, ஷுபாங் ஹெக்டே, ஷரத் ஸ்ரீனிவாஸ், வி. வைஷாக், வி. கௌஷிக், வித்வத் கவேரப்பா, கே. சஷிகுமார், சுஜய் சத்தேரி, டி. நிஷால் , எம். வெங்கடேஷ், கிஷன் பெதாரே, ரோஹித் குமார்.


மேலும் படிக்க | U19 World Cup: 19 வயதுகுட்பட்டோர் உலக கோப்பையை வென்று கொடுத்த இந்திய கேப்டன்கள்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ