டிராவிட், ரோஹித் வேண்டாம்! இவர்கள் தான் பெஸ்ட் - ஹர்பஜன் சிங்!
டி20 உலகக் கோப்பை 2022: ஹர்பஜன் சிங் நெஹ்ரா, ஹர்திக் டி20 போட்டிகளில் இந்தியாவின் பயிற்சியாளர் மற்றும் கேப்டனாக வேண்டும் என கூறியுள்ளார்.
2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இருந்து இந்திய அணி அதிர்ச்சிகரமான முறையில் வெளியேறிய பிறகு, டி20 கிரிக்கெட்டில், தலைமை பயிற்சியாளர் மற்றும் கேப்டன் பொறுப்பில் மாற்றம் தேவை என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை (நவம்பர் 10) அடிலெய்டில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது அரையிறுதியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது, இது ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
2022 டி20 உலகக் கோப்பையில் இருந்து இந்தியா அதிர்ச்சியூட்டும் வகையில் வெளியேறியதைத் தொடர்ந்து, குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஐபிஎல் 2022 பட்டத்தை வென்ற ஹர்திக் பாண்டியா மற்றும் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் முறையே இந்திய அணி டி20 கேப்டன் மற்றும் பயிற்சியாளராக ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோருக்குப் பதிலாக நியமிக்கப்பட வேண்டும் என்று ஹர்பஜன் பரிந்துரைத்தார். இது குறித்து ஹர்பஜன் பேசும் போது, “சமீபத்தில் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஒருவரை, பயிற்சியாளராக கொண்டு வரலாம். உங்களுக்குத் தெரியும், ராகுல் டிராவிட்டிற்கு உரிய மரியாதை என்னிடம் உள்ளது. அவருடன் சேர்ந்து விளையாடி உள்ளேன். அவருக்கு சிறந்த மூளை உள்ளது.
மேலும் படிக்க | பிரபல கிரிக்கெட் வீரருக்கு காலில் எலும்பு முறிவு! இனி விளையாடுவது சந்தேகம்?
இருப்பினும், டிராவிட்டை நீக்குவது மிகவும் கடுமையானது, எனவே அணிக்கு உதவக்கூடிய நெஹ்ரா அல்லது டி20 கிரிக்கெட்டில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற வேறு ஒருவரை அணியில் அமர்த்தலாம். ஆஷிஷ் நெஹ்ரா போன்ற ஒருவர் சிறந்த கிரிக்கெட் மூளையைப் பெற்றுள்ளார். குஜராத் டைட்டன்ஸில் அவர் என்ன செய்தார் என்று அனைவருக்கும் தெரியும். கேப்டன் பதவிக்கு ஹர்திக் பாண்டியா தான் எனது விருப்பம். அவர் அணியில் சிறந்த வீரர், அவரைப் போன்றவர்கள் அணியில் அதிகம் தேவை” என்றார்.
மேலும் படிக்க | இதெல்லாம் ஒரு கேள்வியா? பாபர் ஆவேசத்தின் பின்னணி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ